Tuesday, December 31, 2013

நீங்க கணக்குல புலியா?

இத பாத்துட்டு சொல்லுங்க...


இது படித்திருந்தால் கீழே உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...
நன்றி

Saturday, December 28, 2013

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள ஒரு வழி.

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். 
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. 
  • இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.
  • ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்.
  • இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். 
  • இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். 
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆக்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது.இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.  இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் உபயோகமாக இருக்கும்.நன்றி...

Thursday, December 26, 2013

கோபம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி (புகாரி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி ரழி (அபூதாவூத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ” அறிவிப்பாளர் : அபூதர் ரழி (மிஷ்காத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழி (மிஷ்காத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ” அறிவிப்பாளர் : அனஸ் ரழி (மிஷ்காத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ” அறிவிப்பாளர் : அனஸ் ரழி (மிஷ்காத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழி, (புகாரி)

Wednesday, December 25, 2013

Tuesday, December 24, 2013

உங்கள் கைபேசி தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்..!

இலகுவாக கண்டுபிடிக்க  ஒரு வழி. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம்.

குறிப்பு : உங்க மொபைலை யாரும் திருடி இருந்தால் அதை கண்டுபுடிக்க முடியாது ஏனெனில்  உடனே வேரு சிம் மாற்றி விடுவார்கள் (சிம் மட்டும் மாற்றினால் கூட இந்த முறையில் கண்டுபிடித்துவிடலாம்.

உதாரணமாக வீட்டில் வைத்த மொபைலை காணவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். அதுவும் silent mode.. சைலென்ட் வைக்காமல் இருந்திருந்தால் கூட ஈசியாக அந்த மொபைல்க்கு கால் செய்து எடுத்து விடலாம் ஆனால் சைலென்ட் வைத்து உள்ளோம் பிறகு என்ன?
வீடு முழுவதும் கஷ்டபட்டு தேடி நம்ம மொபைலை கண்டுபுடிப்போம் அல்லவா? இந்த வழியை முயற்சி செய்து பாருங்கள் சைலென்ட் silent வைத்து இருந்தாலும் ரிங் குடுக்க முடியும்.

முதலில் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.
குறிப்பு :உங்கள் கணினி அல்லது நண்பர்கள் கணினி அல்லது மொபைலில் காணமல் போன ஆண்ட்ராய்ட்டு மொபைலில் ஜிமெயில் லாகின் செய்த அதே ஜிமெயில் முகவரியை லாகின் செய்து விட்டு கிழே உள்ள இந்த தளத்திற்கு செல்லவும்:
https://www.google.com/android/devicemanager?u=0

உங்கள் மொபைல் மாடல் மற்றும் கடைசியாக எந்த இடத்தில் அந்த மொபைல் லாகின் செய்தது என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் (map) வரைபடத்தில் அந்த இடத்தை பார்க்கலாம். அல்லது ரிங் என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல்க்கு ரிங் குடுக்க முடியும்!

நன்றி
FB

Sunday, December 22, 2013

தமிழர்களிடம் தமிழில் பேசுவோம்...!

என்க்கு கோஞ்சம் கோஞ்சம் தான் த..மில் தெரியும்...!!!



இதையும் கொஞ்சம் பாருங்களேன்...!

மூடர் கூடம் தமிழ் படத்திலிருந்து


Tuesday, December 10, 2013

பயம் தவிர்!

ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார்.

என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.

சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான்.

உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.

ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.

உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

நன்றி..

உபயம்: தன்னம்பிக்கை வளர்போம் வெற்றி பெருவோம் 

ஜெயித்தவர்களிடம் அப்படி என்ன தான் இருக்கிறது?


1. சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது

2.வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது

3.வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது

4. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது

5.அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது

6.வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது

7.வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது

8.உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது

9.தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது

10.அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது

11. தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது

12.தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது

13. சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது

14.விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது

15.அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது

16.குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது

17. கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது

18. நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது

19. அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.


ஆகையால் 
தன்னம்பிக்கை வளர்போம் வெற்றி பெருவோம்...

Friday, December 06, 2013

மொழி என்பது அறிவல்ல!

தமிழ் பொன்மொழிகள்!


சமீபத்தில் கேட்ட பொன்மொழிகள்

  • ஏழ்மையிலும் நேர்மை
  • கோபத்திலும் பொறுமை 
  • தோல்வியிலும் விடாமுயற்சி
  • வறுமையிலும் உதவி செய்யும் மனம்
  • துன்பத்திலும் துணிவு 
  • செல்வத்திலும் எளிமை
  • பதவியிலும் பணிவு


    நன்றி