Monday, December 29, 2014

மானமுள்ள ""புலிக்கொடி"" மாமன்னன். திப்பு!


மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். 
தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணத்தைத் தழுவியவர். இத்தகைய வீரமிக்க மாவீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆட்சிமுறைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 20, 1750
இடம்: தேவனஹள்ளி, கர்நாடக மாநிலம், இந்தியா
பணி: மன்னர்
இறப்பு: மே 04, 1799
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘மைசூரின் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து, பிறகு ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்து, இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர்.
ஆரம்ப வாழ்க்கை
கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பல போர்க்களம் கண்டார், இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார். பின்னர், 1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், ‘புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை’ தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர் 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.
மூன்றாம் மைசூர் போர்
1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், ஐதராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஆனால், சற்றும் கலங்காத திப்புசுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நான்காம் மைசூர் போரும், திப்புவின் மரணமும்
‘போரில் திப்புசுல்தானை வீழ்த்தமுடியாது’ என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து, திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைப்பேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர். இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல்தானிடம், ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து கூறிய அவர், “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.
ஆட்சிமுறையும், சீர்திருத்தங்களும்
திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்புசுல்தான் அவர்கள், சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டுமல்லாமல், நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கொள்கைகளை இறுதிவரை பின்பற்றியவர். போர் வ்யூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும், இராணுவ தொழில்நுட்பத்திலும் ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்புசுல்தான் என்றால் அது மிகையாகது.
காலவரிசை
1750 – நவம்பர் 20 ஆம்தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் பிறந்தார்.
1776 – காதிகோட்டையை கைப்பற்றினார்.
1782 – டிசம்பர் 26 நாள் மைசூர் பேரரசராக அரியானை ஏறினார்.
1780-84 – பிரிட்டிஷாருடன் இரண்டாம் மைசூர் போர்.
1789-92 – பிரிட்டிஷாருடன் மூன்றாம் மைசூர் போர்.
1799 – பிரிட்டிஷாருடன் நான்காம் மைசூர் போர்.
1799 – மே 4 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.

Sunday, November 30, 2014

சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்

நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை எட்டையபுரத்திலேயே தங்கும்படிச் செய்தார். இவ்வேளையில் அவருக்கு அரசவைக் களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை முத்துப்புலவரின் நட்பும் கிட்டியது. ஆதலால், முகம்மது அலியாரின் தவப்புதல்வர் உமறு தமிழ்மேதை கடிகை முத்துப்புலவரிடம் தமிழ்ப் பாடங்கேட்டுக் கற்பன கற்று, கேட்பன கேட்டுப் புலமையில் சிறந்து வளரலானார். பின்னர் உமறின் அருட்திறத்தையும், கவிதையாற்றலையும், உள்ள உறுதியையும் உணர்ந்த எட்டையபுர மன்னர் கடிகைமுத்துப் புலவரின் விருப்பப்படி அவைகளைப் புலவராக நியமித்தார்.

இவரது புகழ் எங்கும் பரவியது. எட்டையப்பரின் அவைக்கு வந்த வள்ளல் சீதக்காதி உமறின் சிறப்பைக் கண்டு மகிழ்ந்து போற்றித் தம் ஊருக்கு வரும்படி அழைத்துத் தம் நெடுநாள் கனவாகிய நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றை வண்ணத் தமிழ்க் காப்பியமாக வடித்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டார். உமறுப்புலவரும் ஆர்வத்துடன் இசைந்து கீழக்கரையில் தங்கிக் காப்பியம் இயற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
வள்ளல் சீதக்காதி காப்பியத்திற்குரிய கருப்பொருளைப் பெற்று வரும் பொருட்டு உமறுப்புலவரை மார்க்க மேதையும் அரபிக் கவிஞரும் ஆகிய செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் அழைத்துச் சென்றார். உமறுப்புலவரின் புறத்தோற்றத்தைக் கண்ட அப்பா உரைதர மறுத்து விட மனம் வருந்திய உமறுப்புலவர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதுவிட்டு ‘முகம்மது நபியை என்று காண்பேனோ?’ என்று முடியும் 88 விருத்தங்களைப்பாடிக் கண்ணயர்ந்து விட்டார்.
காலைத் தொழுகைக்குப் பின்னர் சென்ற உமறை அப்பா அன்புடன் வரவேற்று உரைதர முற்பட்டார். வேலை பளு மிகுந்திருந்ததால் பரங்கிப் பேட்டையில் வாழ்ந்த தனது மாணாக்கர் கண்ணாட்டி வாப்பா என்னும் காலிமுகம்மது தீபியிடம் உரைபெற ஏற்பாடு செய்தார். அவரும் உரை தந்து உதவினார். உமறுப்புலவரை உயிர்போல மதித்துப் போற்றிய வள்ளல் சீதக்காதி இறந்துவிட்டார். புரவலரை இழந்து தவித்த புலவரை அபுல்காசிம் என்னும் பரங்கிப்பேட்டைச் செல்வர் வரவேற்று ஆதரித்தார். சீறாக்காப்பியம் சீராக வளர்ந்தது.
சீறத்து எனும் அரபிச் சொல்லின் தமிழ் வடிவம் ‘சீறா’ சீறத் என்றால் வாழ்க்கை வரலாறு என்று பொருள். இப்பொதுச் சொல் காலப்போக்கில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றையே குறித்தது. இது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருங்கிய வடிவமாகும். புராண என்பது புனிதமான பழங்கதை அல்லது புனிதமான பழைய வரலாறு என்று பொருள்தரும். சீறாப்புராணம் பொதுவான பெருங்காப்பிய அமைதிகளைப் பெற்றுள்ளது. சிறப்பாகத் தண்டியலங்காரம் வகுத்துள்ள காப்பியப் பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்நூலின் கண் மூன்று காண்டங்களில் 92 படலங்களும் 5027 பாடல் களும் உள்ளன. முதல்காண்டம் விலாதத்துக் காண்டம், இதில் நபிகள் நாயகம் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் மனமும் பற்றி 24 படலங்கள் அமைந்துள்ளன. 1240 விருத்தங்கள் உள்ளன. அடுத்தது நுபுவ்வத்துக் காண்டம். இது நபிகள் நாயகம் நபித்துவம் பெற்றதிலிருந்து கொடுமனக் குரைசிகள் இழைத்த கொடுமை பற்றியும், முஸ்லிம்களின் பொறுமை பற்றியும், இஸ்லாம் நிலை கொண்டது பற்றியும் கூறுகிறது. இதன்கண் 21 படலங்களும் 1014 பாடல்களும் உள்ளன. ஹிஜ்ரத்துக் காண்டத்தில் மக்கா குரைசிகளின் கொடுமையால் நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதினா மக்களின் அழைப்பை ஏற்று சென்று அங்கு குடியேறியதிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை 47 படலங்களின் 2082 பாடல்களில் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் வரலாறு நிறைவு செய்யப்படவில்லை. ஹனிக்கூட்டத்தார் படலத்தில் நின்று விடுகிறது. சீறாப்புராணத்தைச் சரிபார்த்து முதன்முதலில் புதுப்பித்தவர் செய்கு அப்துல் காதிர் நெயினார் லெப்பை ஆலிம் ஆவார்.
சீறாப்புராணம் மட்டுமன்றி முதுமொழி மாலை, சீதக்காதி திருமண வாழ்த்து, சீதக்காதி பெயரில் கோவை போன்ற நூல்களையும் உமறுப்புலவர் இயற்றி உள்ளார். சீறாப்புராணம் இலக்கியத் தரம் மிகுந்த சிறந்த பேரிலக்கியமாகும். மற்ற மூன்றும் சிற்றிலக்கியங்கள் ஆகும். இவற்றில் சீதக்காதி கோவை கிடைக்கவில்லை.
கவிநயமும் இனிய சொல்லாட்சியும் அருளுணர்வும் கலந்த தேன்பாகு போன்றது இவரது விருத்தப்படைப்பு. இஸ்லாமிய மரபுகளையும், தமிழ் மரபுகளையும் இணைத்து வழங்கிய சிந்தனைக்கினியவர் உமறுப்புலவர்.
நன்றி: அரும்பாவூர் மு. சாஹிரா பானு

Tuesday, November 18, 2014

நம்முடைய நான்கு மனைவிகள்...!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக
அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். 
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். 
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள்.அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்... 
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.  
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். 
தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். 
அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். 
பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.
அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள்.
காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.
நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும்.
தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான். 

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

  1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
  2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
  3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
  4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா (ஈமான்). நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மா (ஈமான்) தான்.
ஆகையால் உங்கள் அனைத்து மனைவியர்களையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

நன்றி
Netல் சுட்டது!

Friday, November 14, 2014

பாபர் மஸ்ஜித் நிஜங்களும், போராட்டங்களும் (ஒரு பார்வை).

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُاَ 


கி.பி.1526 – முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 – பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார்.
1524ல் இப்ராஹிம் லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 – முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
கி.பி.1855 – பாபர் பள்ளிவாசலின் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 – முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்க
ளும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை – பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி – பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிப்புகள்.அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் “ராம் சபுத்ரா’ எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 – ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 – அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 – இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 – மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசலின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை “சர்ச்சைக்குரியபகுதி” என அறிவிக்கிறார்.
கி.பி.1949 – இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 – நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 – சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 – அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 – பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 – விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 – முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்திலிருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 – டிசம்பர் 6 – நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார். கி.பி.1992 – டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி லிபர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 – சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது. 2002 – பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது.
மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 – பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 – ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 – பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்லியியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 – லிபர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 – செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.
பாசிசத்தின் முகத்திரையை கிழித்து எரிய வேண்டும்,,நம்முடைய அடுத்த தலைமுறைக்கு வரலாற்றைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்..
ஹிந்துத்வா பயங்கரவாதிகள் தண்டிக்கப்படும் வரை நாம் போராட வேண்டும்..நீதியும் நேர்மையும் என்றும் அழியாது..இன்ஷா அல்லாஹ்,எதிர்கால சந்ததியினர் இதற்க்கு தக்க நடவடிக்கை எடுப்பார்கள்;நீதியை நிலை நாட்டுவார்கள்...

நன்றி
FB
பாபர் மஸ்ஜித் பற்றிய சர்ச்சை...கானொளி...

Monday, November 03, 2014

இஸ்லாமியப் பொது அறிவு....

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 


1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.


2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? 

ஹபஸா (அபிசீனியா)


3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.


4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

  • 1. முதல் மாதம் முஹர்ரம்,
  • 2. இரண்டாம் மாதம் ஸபர்,
  • 3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,
  • 4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,
  • 5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,
  • 6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,
  • 7. ஏழாம் மாதம் ரஜப்,
  • 8. எட்டாம் மாதம் ஷாஃபான்,
  • 9. ஒன்பதாம் மாதம் ரமழான்,
  • 10. பத்தாம் மாதம் ஷவ்வால்,
  • 11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,
  • 12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.


5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?
  • 1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.
  • 2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.
  • 3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.

6. உம்முல் குர்ஆன் எது? 

ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)


7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்


8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?

23 ஆண்டுகள்


9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?

மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்


10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?

குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).


11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?

அப்துல்ஹமீது பாகவி


12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?

ஜனாஸா தொழுகை


13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?

எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.


14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?

'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)


15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?

'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)


16. உலகின் இறுதி நபி யார் ?

உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்


17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.


18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

நபி முஸா (அலை)


19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

நபி ஈஸா (அலை)


20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?

நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).


21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?

ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)


22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?

புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ


23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

கலிபா உஸ்மான் (ரலி)


24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்


25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ? 

அலி (ரலி) அவர்கள்.


26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

அன்னை சுமையா (ரலி) அவர்கள்.


27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)


28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?

காலித் பின் வலீத் (ரலி)


29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்


30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்


31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்


32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.


33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)


34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்


35. திருக்குர்ஆன் - இறைவேதம்


36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை


37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா


38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்


39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்


40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்


41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்


42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.


43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை


44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை


45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்


46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்


47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு


48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை


49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது


50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்


51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு


52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.


53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்


54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது


55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு


நன்றி
மின் அஞ்சல்!

Friday, October 31, 2014


ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் 

உருக்கமான மறுமை சிந்தனை!


எனது பெயர் ஜனாஸா!
நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.

மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார்.

நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன். எனது வாய் திறந்தது. என் சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அநேகமாக “ஜம் ஜம்” தண்ணீராக இருக்கும். மரணத் தறுவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன்.

அனைவரும் “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிய ஆரம்பித்தனர். எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.

ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்ற ஜடமாக ஆகி விட்டேன்.

எனக்குள்ள நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை. பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது.

அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பமாயின.

நான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.

இனி எனது அடையாளம் என் கப்று மட்டும்தான். ஓ.... எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்து மகிழ்ந்த அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா!

அதாவது, இறந்த உடல்!

எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்றை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக்கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

வீடு... என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக் கணக்கில் செலவு செய்து கட்டினேன்.

என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியலறையில் எனக்கு குளிக்க அனுமதியில்லை.

குளியலறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்படாத இந்தப் பொருட்களை நான் ஏன் வாங்கினேன்?

குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத் துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந்த என் ஆடைகளெல்லாம் எங்கே போய் விட்டன?

என்னை சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலையுயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது இப்பொழுது எனக்கில்லை. எனக்குக் கிடைத்திருப்பதெல்லாம் இந்த மரப் பெட்டிதான்!

இதற்குத்தானா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்? இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன்! எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன்.

ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதனை மறந்து உலக மாயையில் மூழ்கிப் போனேன். பாவங்களில் பழகிப் போனேன்.

ஆனால் இன்றோ... எனது விளையாட்டு முடிந்து விட்டது.

இது எனக்கு மட்டுமல்ல. உங்கள் எல்லோருக்கும்தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள்.ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் கலைந்து விடும். எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும்.

ஆதலால் தயாராக இருந்துகொள்ளுங்கள். நன்மைகளைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும். உங்கள் இறுதிப் பயணத்தஇன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.

மரணத்தை மறவாதீர்கள். அது நிச்சயம் வந்தே தீரும். அது உங்களை இதோ நெருங்கி விட்டது.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும். அன்றியும், இறுதித் தீர்ப்புநாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதிபலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (சூரா ஆல இம்ரான் 3:185



Tuesday, July 15, 2014

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை தைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை 
  1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
  2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
  3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
  4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
  5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
  6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்.

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்

ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது

”ஆகவே மனிதன், (தான்)எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்கவேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன்படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசிநெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.”(அல் குர்ஆன்: 86:5-7) 

இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்

பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
 பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது

ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்

இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்

பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும்  விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG  அதாவது கருமுட்டையாகும்
கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!

பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!

மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

  • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

  • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.
  • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது

  • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன
  • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

  • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

  • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்

மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

  • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
  • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது
  • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது

  • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

  • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.

  • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

  • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.


  • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

  • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.
  • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
  • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
  • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.


  • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்

“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

 நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!

சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!! அல்லாஹு அக்பர்!!!

குறிப்பு – பல்வேறு இணைதளங்கள் இந்த கட்டுரைக்கு உதவின நன்றிகள் பல!
மினஞ்சல் வழி தகவல்...

இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?


இவரது பெயர் அமீனா அசில்மி (Aminah Assilmi).

அமெரிக்காவை சேர்ந்தவரான இவர் 1977 ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ).

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது, சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
“நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது” —– ஆமினா அசில்மி.

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.
ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.
அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார்.
மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார்.
அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்
“அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்”
ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது
“நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்”
இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.
” நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று…நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை”
பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்…
“நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதற்காக

ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.
” நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்.”
பன்றி இறைச்சி மற்றும் மதுவை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச் செய்தார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது. “அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின”
1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஆமினா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
” இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்”
“நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்”
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே. ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.
குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம்.
அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது.
அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும்? ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல…வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
“நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” — குரான் 2:42
“என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை”
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
“முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்…………..எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாஹ்விடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்”
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்….அல்லாஹ்விற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்… தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
“நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று”
மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிக அதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
“அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை” — குரான் 2:286
உண்மைதான்….இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
“மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை” — குரான் 4:36
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார்.
அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.
இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.
” நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்” அதற்கு அவரது தாய் “அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்”… “அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்”
“ஒ அப்படியா…………. இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்”
சுபானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது…. “இறைவா நீ மாபெரும் கிருபையாளன்”.
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.
16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார். ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமைப்படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது?. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு “பரக்காஹ்” என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.
அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை.

  • ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
  • அன்றோ இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர். “நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்”
  • அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர்.

இறைவன் தன்னை நாடிவந்தவற்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர். கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.

சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.

“நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும், நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று” எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள். இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. 
தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்…அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால் கடந்த 2010 ஆம் ஆண்டு கார் விபத்தில் இவர் இறந்தார் (இன்னாலில்லஹி 
வஇன்னா இலைஹி ராஜிஊன்)

Monday, June 16, 2014

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் எப்படி ஆட்சி செய்தார் என்பதற்க்கு ஒரு சிறிய வரலாறு!

இஸ்லாத்திற்க்கு எதிராய் வாள் எடுத்து நின்ற உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் எப்படி ஆட்சி செய்தார் என்பதற்க்கு ஒரு சிறிய வரலாறு:

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர்(ரலி)யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது.
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது.
அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...
அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்...
"யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்...
உடனே, அபு தர் (ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார்.
அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும்.
நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்...
அபுதரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்...
தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது.
மூன்றாவது நாள் அஸர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்...
இரண்டு நாட்கள் ஓடியது. மூன்றாவது நாள் வந்தது. அஸர் (மாலை) தொழுகை நடைபெற்றது.
எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர் நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு...
தூரத்தில் ஒரு குதிரை மிகவும்வேகமாக வருகிறது...
தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்.....
உமர் அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்...?? என கேட்கிறார்.
அதற்கு அவர் " முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர் தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார் என்று நாளை வரலாறு என்னை பழிக்கும்.
மேலும், இங்கே தப்பிவிடலாம் நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்...
அடுத்து அபு தரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்...??" என்று கேட்டார் உமர்.
உடனே அபூதர் "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன்.
அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்...
பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்...
குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார்.
ஏனென்று கேட்டதற்கு "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார்.
"இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய  அல்லாஹ் ஒருவனுக்கே புகழ்  அனைத்தும்" என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி அவர்கள்.

Saturday, April 19, 2014

நோன்பாளி! (சிறுகதை)

வெகுதூரம் நடந்து வந்த அயர்ச்சி அந்த நாற்பது வயது முதிர் இளைஞனிடம் தெரிந்தது. நெற்றி வியர்வையை வலது உள்ளங்கையால் அழுந்தத் துடைத்து கொண்டான். இடது கை ஒரு அழுக்கு மஞ்சபையை இறுக்கமாக பிடித்திருந்தது.
பள்ளிவாசல் எளிமையாய் நிமிர்ந்திருந்தது. பள்ளிவாசல் பக்கவாட்டில் கூரைக் கொட்டகையாய் 'மதர்ஸா' பள்ளிக்கூடம். தயக்கத்துடன் பள்ளிவாசலுக்குள் கால் வைத்தான் அவன். ரப்பர் மிதியடியை கழற்றி ஓரம் தள்ளினான்.
தொழுகுமிடத்தில் யாருமில்லை. கொல்லைப் புறத்தில் முதியவர் ஒருவர் செங்கல் கலவையிலிருந்து சிறுநீர் ஒற்றும் கட்டிகள் செய்து கொண்டிருந்தார்.
'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்!' என்றான் வந்தவன்.
''வஅலைக்கும் சலாம்!'' நிமிர்ந்தார்.
''நீங்க பள்ளி வாசல் மோதினார் தானே?''
''ஆமாம்!''
''அஜரத்?''
''மாடியறைல ஓய்வெடுத்துகிட்டு இருப்பார். நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே?''
''மோதினார் பாய்! என் பெயர் ஜெய்லானி. என் சொந்த ஊர் மதுரைக்கு அருகிலிருக்கும் திருப்பத்தூர். வாப்பா, உம்மா இல்லை; சொந்த, பந்தம் கண்டுக்கல. கடந்த 20 வருஷமா மிஸ்கின் வாழ்க்கை தான். ரம்ஜான் மாசம் நெருங்கிருச்சு. நான் கடுமையான நோம்பாளி.
''ரம்ஜான் மாசத்துல எந்த ஊர்ல இருக்கேனோ, அந்த ஊர் பள்ளி வாசலிலேயே டேரா போட்டு முப்பது நோம்பும் வச்சிருவேன். இந்த வருஷம் முப்பது நோம்பையும் உங்க மஹல்லால்ல தான் நோக்கப் போறேன். அது சம்பந்தமாக முத்தவல்லியை பாக்கணும் மோதினார் பாய்!''
தன் தாடியை கோதிவிட்டுக் கொண்டார் மோதினார்...
''உங்க மேல அல்லாஹ் கருணை காட்டியிருக்கான் ஜெய்லானி பாய். முத்தவல்லி ஊர்லதான் இருக்கார். முத்தவல்லிக்கு தகவல் சொல்லி விடுகிறேன். காத்திருங்கள்!''
மஞ்சள் பையை ஓரமாக வைத்து விட்டு 'ஓது' செய்தான் 'நபில்' தொழுகை. இரண்டு ரக்காயத்து முடித்து விட்டு 'துவா' கேட்க ஆரம்பித்தான் ஜெய்லானி.
வந்து சேர்ந்தார் முத்தவல்லி.
''அஸ்ஸலாமு அலைக்கும் முத்தவல்லி பாய்!''
''வஅலைக்கும் ஸலாம் பாய். உங்களை பத்தி மோதினார் சொன்னார். நீங்க நம்ம மஹல்லால்லயே தங்கி முப்பது நோம்பும் நோக்கறதை பத்தி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனா, இங்க இருக்கிற நானூறு முஸ்லிம் குடும்பங்களும் ஏழ்மையானவை. 'சஹர்' சாப்பாடு சிறப்பாக இருக்காது. கைக்காசுக்கு ஏத்தபடி தான் நோம்புக் கஞ்சியே காய்ச்சுவோம்!''
''மிஸ்கினுக்கு என்ன பாய் பெருசா எதிர்பார்ப்பு? சஹருக்கு ரசம் சோறுன்னாலும் மகிழ்ச்சி தான். நோம்பு திறக்க ஒரு கொட்ரா நோம்புக் கஞ்சி, ரெண்டு மசால் வடை போதும் பாய்!''
திடீரென்று முத்தவல்லியின் முகத்தில் சந்தேகம் கிளைத்தது...
''பாய்! நீங்க ஒண்ணும் தீவிரவாதி இல்லையே?''
மஞ்சள் பையைத் திட்டில் கவிழ்த்தான் ஜெய்லானி. பழைய லைப்பாய் சோப் அரைக்கட்டி. இரு ஜிப்பாக்கள், இரு லுங்கிகள், இரு ஜோடி உள்ளாடைகள், தஸ்பமணிமாலை, யாஸின் புத்தகம்.
''என்னைப் பார்த்தா தீவிரவாதி மாதிரியா தெரியுது?''
''தப்பா நினைச்சிக்காதீங்க பாய். முந்தியெல்லாம் கொமரு காரியம், பள்ளிவாசல் கட்றதுக்கு உதவின்னு ஆளுக வருவாங்க. முடிஞ்ச பணத்தை வசூல் பண்ணி தருவோம். ரெண்டு, மூணு வருஷமா நிலைமை தலைகீழ். நம்ம காசை வாங்கிட்டு போய் யாரும் அதை தீவிரவாதக் காரியத்துக்கு பயன்படுத்தி மொத்த சமுதாயத்தோட பேரையும் கெடுத்திரக்கூடாதுல? அதனால், செய்யற சிறு உதவியையும் ஆராய்ஞ்சு தகுதியான ஆளுக்கு செய்றோம்!''
ஆமோதித்து தலையாட்டினான் ஜெய்லானி.
''ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நாளுக்கான 'சஹர்' சாப்பாட்டை உங்களுக்கு வழங்கும். நோம்பு திறக்கறது நோம்பாளிகளோடயே நீங்கத் திறக்கலாம். இருபத்தியேழாம் கிழமை 'சஹர்' சாப்பாட்டை நம்ம பள்ளி வாசலே தயாரித்து அளிக்கும்!''
''முத்தவல்லி பாய்! முப்பது நாளும் நோம்புக் கஞ்சி தயாரிக்கும் பணிக்கு என்னால் முடிஞ்ச உதவியைச் செய்கிறேன். பூண்டு உரிக்கிறது, தேங்காய் திருகி, அரைக்கிறது, வெங்காயம் உரிக்கறது இந்த மாதிரி வேலைகள் செய்கிறேன். கொல்லைல இருக்கிற தென்னை மரங்கள் ஏறி தேங்காய் பறிச்சு போடுறேன், கல் அடுப்பு ரெடி பண்றேன், முப்பது
நாளும் பள்ளிவாசலுக்கு நான் ஏதாவது செஞ்சுக்கிட்டு தான் இருப்பேன்!
''முறுவலித்தார் முத்தவல்லி...
''அப்படியே செய்ங்க பாய்!''

அன்றைய 'மஹரிப்' தொழுகைக்கான பாங்கை ஜெய்லானியே ஓதினான்.
மறுநாள் காலை தலையில் ஒரு அழுக்குத் துணியைக் கட்டிக் கொண்டு பள்ளிவாசல் முழுமையையும் ஒட்டடை அடித்தான் ஜெய்லானி. ஹவுதுக்குள் இறங்கி கசடுகளை நீக்கி, இரு விரால் மீன்கள் விட்டான்; தென்னை மரம் ஏறி இளநீர்களை உலுப்பினான். உலுப்பின காய்களை ஜெய்லானியும், மோதினார் பாயும் உரித்தனர். மாலை நெருங்கியது... ஆங்காங்கே சிறுவர்களும், சிறுமியரும், பெரியவர்களும் வானத்தில் பிறை தேடினர்.
மேகமூட்டமாய் இருந்ததால் பிறை தெரியவில்லை.
ஓடிவந்தார் முத்தவல்லி...
''போன் வந்திருச்சு, பிறை பாத்துட்டாங்க... போன் வந்திருச்சு, பிறை பாத்துட்டாங்க!''
அவ்வளவுதான்... பள்ளிவாசல் 'நகரா' நோக்கி ஓடினான் ஜெய்லானி. நகரா அருகே மைக்கை ஸ்டாண்டிட்டான். நகராவை டமடமவென அடித்தபடி ''பிறை பொறந்திருச்சு!'' என்று கூவினான். முதல் நோன்புக்கான 'சஹர்' சாப்பாடு ஒரு கூலித் தொழிலாளி வீட்டில்... ரசம் சோறு, உப்புக் கண்டம் பொரித்த அப்பளம், வாழைப்பழம். நோம்பு
நோற்பதற்கான நிய்யத்தைக் கூறினான் ஜெய்லானி. பள்ளிவாசல் போய் படுத்துக் கொண்டான். பகலில் நோன்புக் கஞ்சிக்காக வெங்காயம், வெள்ளைப்பூண்டு உரிக்கும் வேலைகளில் ஈடுபட்டான். முப்பது நாட்களுக்கு, முப்பது வீடுகளில் 'சஹர்' சாப்பாடு எடுத்துக் கொண்டான் ஜெய்லானி.
கிராம மக்கள் பணம் வசூல் பண்ணி எடுத்துக் கொடுத்த ஆடையை அணிந்து ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டான்.
அன்று மாலையே கண்கள் கலங்கியபடி முத்தவல்லியிடமும், மஹல்லா மக்களிடமும் விடை பெற்றான் ஜெய்லானி.
ஜெய்லானியிடம் இருநுõறு ரூபாய் நீட்டினார் முத்தவல்லி...
''மறுக்காம வாங்கிக்கங்க பாய்; பஸ் செலவுக்கு உதவும்!''
நீண்ட தூரம் கையசைத்தபடியே கூடியிருந்த மக்களிடமிருந்து விலகி நடந்தான் ஜெய்லானி.
செம்மண் சாலையில் எட்டு கி.மீ., நடந்தான் ஜெய்லானி. செம்மண் சாலை முடிவில் ஒரு விலையுயர்ந்த கார்
நின்றிருந்தது. காரின் பின் பக்கத்தில் சாய்ந்து நின்றிருந்த ஓட்டுநர் ஜெய்லானியைக் கண்டதும் வணங்கியபடி ஓடோடி வந்தான். துணிப்பையை வாங்கிக் கொள்ள கை நீட்டினான். மறுதலிப்பாய் தலையாட்டியபடி காரின் பின் இருக்கையில் போய் அமர்ந்தான் ஜெய்லானி.
கார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் பறந்தது. குளித்து சிறிய ஓய்வுக்கு பின் புத்தாடைக்கு மாறினான். அடுத்த சில மணிநேரத்தில் விமான நிலையத்துக்கு விரைந்தான் ஜெய்லானி. விமானம் ஜெய்லானியை சுமந்து ஹாங்காங் பறந்தது.
ஹாங்காங் — அலங்காரத் தோட்டம் கூடிய பங்களா. தஸ்பமணி உருட்டியபடி அமர்ந்திருந்த 66 வயது பெண்மணி நிமிர்ந்தார்.
''அஸ்ஸலாமு அலைக்கும்!''
''வஅலைக்கும் சலாம்!''
''பயணம் எப்படியிருந்தது மகனே?''
''பயணத்தின் சிறப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை உம்மா. பயணத்தின் பல நோக்கங்கள் நிறைவேறின. நான் பிறந்த இந்திய மண்ணில் ரமலான் நோன்பை நோற்க விரும்பினேன். விரும்பிய படியே நோற்றும் விட்டேன்.
''ஒரு ஏழை முஸ்லிமாக இருந்து ஏழை, எளியோரின் தின உணவையே 'சஹர்' சாப்பாடாக உண்டு, நோன்பு சார்ந்த அனைத்துக் காரியங்களுக்கும் உடல் உழைப்பு ஈந்து, ஒரே மாதத்தில் அந்த மஹல்லா மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டேன் உம்மா.
''என் உடலை பாருங்கள் உம்மா. எடை குறைந்து மினுமினுக்கிறது. என் மனதிலிருந்த அழுக்குகளும், செல்வச் செருக்கும் கரைந்தோடி விட்டன. என் மீதி வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு ரமலான் மாதத்தையும் ஒரு இந்திய குக்கிராம பள்ளிவாசலின் ஏழை நோன்பாளியாக கழிப்பேன் உம்மா!''
''இன்ஷா அல்லாஹ் மகனே. அந்த பள்ளி வாசலில் உனக்கு எவ்வளவு 'ஜக்காத்து' கொடுத்தனர்?''
''இருநுõறு ரூபாய் உம்மா!''
''பதிலுக்கு அவர்களுக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?''
''அந்த பள்ளிவாசல் சீரமைப்புக்கும், அக்கிராம மக்கள் நலனுக்கும் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பப் போகிறேன்!''
''உன்னை மகனாய் பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன் ஜெய்லானி!''
''அல்லாஹ் உங்கள் வழியாகவே எனக்கு நற்சிந்தனை வழங்கியுள்ளான் உம்மா; எல்லாப் புகழும் இறைவனுக்கே!''
தஸ்பமணி மாலை உருட்டியபடி உம்மாவும் புன்முறுவலாய் ஆமோதித்தார்.
நன்றி: தினமலர்