Sunday, November 30, 2014

சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்

நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை எட்டையபுரத்திலேயே தங்கும்படிச் செய்தார். இவ்வேளையில் அவருக்கு அரசவைக் களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை முத்துப்புலவரின் நட்பும் கிட்டியது. ஆதலால், முகம்மது அலியாரின் தவப்புதல்வர் உமறு தமிழ்மேதை கடிகை முத்துப்புலவரிடம் தமிழ்ப் பாடங்கேட்டுக் கற்பன கற்று, கேட்பன கேட்டுப் புலமையில் சிறந்து வளரலானார். பின்னர் உமறின் அருட்திறத்தையும், கவிதையாற்றலையும், உள்ள உறுதியையும் உணர்ந்த எட்டையபுர மன்னர் கடிகைமுத்துப் புலவரின் விருப்பப்படி அவைகளைப் புலவராக நியமித்தார்.

இவரது புகழ் எங்கும் பரவியது. எட்டையப்பரின் அவைக்கு வந்த வள்ளல் சீதக்காதி உமறின் சிறப்பைக் கண்டு மகிழ்ந்து போற்றித் தம் ஊருக்கு வரும்படி அழைத்துத் தம் நெடுநாள் கனவாகிய நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றை வண்ணத் தமிழ்க் காப்பியமாக வடித்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டார். உமறுப்புலவரும் ஆர்வத்துடன் இசைந்து கீழக்கரையில் தங்கிக் காப்பியம் இயற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
வள்ளல் சீதக்காதி காப்பியத்திற்குரிய கருப்பொருளைப் பெற்று வரும் பொருட்டு உமறுப்புலவரை மார்க்க மேதையும் அரபிக் கவிஞரும் ஆகிய செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் அழைத்துச் சென்றார். உமறுப்புலவரின் புறத்தோற்றத்தைக் கண்ட அப்பா உரைதர மறுத்து விட மனம் வருந்திய உமறுப்புலவர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதுவிட்டு ‘முகம்மது நபியை என்று காண்பேனோ?’ என்று முடியும் 88 விருத்தங்களைப்பாடிக் கண்ணயர்ந்து விட்டார்.
காலைத் தொழுகைக்குப் பின்னர் சென்ற உமறை அப்பா அன்புடன் வரவேற்று உரைதர முற்பட்டார். வேலை பளு மிகுந்திருந்ததால் பரங்கிப் பேட்டையில் வாழ்ந்த தனது மாணாக்கர் கண்ணாட்டி வாப்பா என்னும் காலிமுகம்மது தீபியிடம் உரைபெற ஏற்பாடு செய்தார். அவரும் உரை தந்து உதவினார். உமறுப்புலவரை உயிர்போல மதித்துப் போற்றிய வள்ளல் சீதக்காதி இறந்துவிட்டார். புரவலரை இழந்து தவித்த புலவரை அபுல்காசிம் என்னும் பரங்கிப்பேட்டைச் செல்வர் வரவேற்று ஆதரித்தார். சீறாக்காப்பியம் சீராக வளர்ந்தது.
சீறத்து எனும் அரபிச் சொல்லின் தமிழ் வடிவம் ‘சீறா’ சீறத் என்றால் வாழ்க்கை வரலாறு என்று பொருள். இப்பொதுச் சொல் காலப்போக்கில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றையே குறித்தது. இது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருங்கிய வடிவமாகும். புராண என்பது புனிதமான பழங்கதை அல்லது புனிதமான பழைய வரலாறு என்று பொருள்தரும். சீறாப்புராணம் பொதுவான பெருங்காப்பிய அமைதிகளைப் பெற்றுள்ளது. சிறப்பாகத் தண்டியலங்காரம் வகுத்துள்ள காப்பியப் பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்நூலின் கண் மூன்று காண்டங்களில் 92 படலங்களும் 5027 பாடல் களும் உள்ளன. முதல்காண்டம் விலாதத்துக் காண்டம், இதில் நபிகள் நாயகம் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் மனமும் பற்றி 24 படலங்கள் அமைந்துள்ளன. 1240 விருத்தங்கள் உள்ளன. அடுத்தது நுபுவ்வத்துக் காண்டம். இது நபிகள் நாயகம் நபித்துவம் பெற்றதிலிருந்து கொடுமனக் குரைசிகள் இழைத்த கொடுமை பற்றியும், முஸ்லிம்களின் பொறுமை பற்றியும், இஸ்லாம் நிலை கொண்டது பற்றியும் கூறுகிறது. இதன்கண் 21 படலங்களும் 1014 பாடல்களும் உள்ளன. ஹிஜ்ரத்துக் காண்டத்தில் மக்கா குரைசிகளின் கொடுமையால் நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதினா மக்களின் அழைப்பை ஏற்று சென்று அங்கு குடியேறியதிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை 47 படலங்களின் 2082 பாடல்களில் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் வரலாறு நிறைவு செய்யப்படவில்லை. ஹனிக்கூட்டத்தார் படலத்தில் நின்று விடுகிறது. சீறாப்புராணத்தைச் சரிபார்த்து முதன்முதலில் புதுப்பித்தவர் செய்கு அப்துல் காதிர் நெயினார் லெப்பை ஆலிம் ஆவார்.
சீறாப்புராணம் மட்டுமன்றி முதுமொழி மாலை, சீதக்காதி திருமண வாழ்த்து, சீதக்காதி பெயரில் கோவை போன்ற நூல்களையும் உமறுப்புலவர் இயற்றி உள்ளார். சீறாப்புராணம் இலக்கியத் தரம் மிகுந்த சிறந்த பேரிலக்கியமாகும். மற்ற மூன்றும் சிற்றிலக்கியங்கள் ஆகும். இவற்றில் சீதக்காதி கோவை கிடைக்கவில்லை.
கவிநயமும் இனிய சொல்லாட்சியும் அருளுணர்வும் கலந்த தேன்பாகு போன்றது இவரது விருத்தப்படைப்பு. இஸ்லாமிய மரபுகளையும், தமிழ் மரபுகளையும் இணைத்து வழங்கிய சிந்தனைக்கினியவர் உமறுப்புலவர்.
நன்றி: அரும்பாவூர் மு. சாஹிரா பானு

Tuesday, November 18, 2014

நம்முடைய நான்கு மனைவிகள்...!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக
அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். 
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். 
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள்.அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்... 
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.  
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். 
தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். 
அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். 
பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.
அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள்.
காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.
நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும்.
தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான். 

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

  1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
  2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
  3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
  4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா (ஈமான்). நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மா (ஈமான்) தான்.
ஆகையால் உங்கள் அனைத்து மனைவியர்களையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

நன்றி
Netல் சுட்டது!

Friday, November 14, 2014

பாபர் மஸ்ஜித் நிஜங்களும், போராட்டங்களும் (ஒரு பார்வை).

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُاَ 


கி.பி.1526 – முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 – பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார்.
1524ல் இப்ராஹிம் லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 – முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
கி.பி.1855 – பாபர் பள்ளிவாசலின் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 – முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்க
ளும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை – பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி – பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிப்புகள்.அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் “ராம் சபுத்ரா’ எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 – ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 – அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 – இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 – மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசலின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை “சர்ச்சைக்குரியபகுதி” என அறிவிக்கிறார்.
கி.பி.1949 – இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 – நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 – சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 – அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 – பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 – விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 – முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்திலிருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 – டிசம்பர் 6 – நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார். கி.பி.1992 – டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி லிபர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 – சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது. 2002 – பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது.
மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 – பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 – ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 – பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்லியியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 – லிபர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 – செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.
பாசிசத்தின் முகத்திரையை கிழித்து எரிய வேண்டும்,,நம்முடைய அடுத்த தலைமுறைக்கு வரலாற்றைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்..
ஹிந்துத்வா பயங்கரவாதிகள் தண்டிக்கப்படும் வரை நாம் போராட வேண்டும்..நீதியும் நேர்மையும் என்றும் அழியாது..இன்ஷா அல்லாஹ்,எதிர்கால சந்ததியினர் இதற்க்கு தக்க நடவடிக்கை எடுப்பார்கள்;நீதியை நிலை நாட்டுவார்கள்...

நன்றி
FB
பாபர் மஸ்ஜித் பற்றிய சர்ச்சை...கானொளி...

Monday, November 03, 2014

இஸ்லாமியப் பொது அறிவு....

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 


1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.


2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? 

ஹபஸா (அபிசீனியா)


3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.


4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

  • 1. முதல் மாதம் முஹர்ரம்,
  • 2. இரண்டாம் மாதம் ஸபர்,
  • 3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,
  • 4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,
  • 5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,
  • 6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,
  • 7. ஏழாம் மாதம் ரஜப்,
  • 8. எட்டாம் மாதம் ஷாஃபான்,
  • 9. ஒன்பதாம் மாதம் ரமழான்,
  • 10. பத்தாம் மாதம் ஷவ்வால்,
  • 11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,
  • 12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.


5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?
  • 1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.
  • 2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.
  • 3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.

6. உம்முல் குர்ஆன் எது? 

ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)


7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்


8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?

23 ஆண்டுகள்


9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?

மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்


10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?

குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).


11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?

அப்துல்ஹமீது பாகவி


12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?

ஜனாஸா தொழுகை


13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?

எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.


14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?

'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)


15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?

'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)


16. உலகின் இறுதி நபி யார் ?

உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்


17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.


18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

நபி முஸா (அலை)


19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

நபி ஈஸா (அலை)


20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?

நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).


21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?

ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)


22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?

புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ


23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

கலிபா உஸ்மான் (ரலி)


24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்


25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ? 

அலி (ரலி) அவர்கள்.


26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

அன்னை சுமையா (ரலி) அவர்கள்.


27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)


28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?

காலித் பின் வலீத் (ரலி)


29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்


30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்


31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்


32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.


33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)


34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்


35. திருக்குர்ஆன் - இறைவேதம்


36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை


37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா


38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்


39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்


40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்


41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்


42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.


43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை


44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை


45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்


46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்


47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு


48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை


49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது


50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்


51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு


52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.


53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்


54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது


55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு


நன்றி
மின் அஞ்சல்!