A. K. இராசன் அவர்கள் எழுதிய தென்னகமும் பக்கீர்களும் புத்தகம் படிக்கும் போது தான் பல பல அறிய தகவல்கள் தெரிய முடிகிறது.
திருச்சி மஹான் நத்தஹர்வலியார் அவர்களிடம், தனக்கு பிள்ளைபாக்கியம் இல்லாத குறையையும் மனவேதனையையும் அப்போது சோழதேசத்தை ஆண்ட சுந்தரச்சோழன் மனம் வெதும்பி கூறினான்.
அப்போதே சுந்தரச்சோழனுக்காகவும் அரசி வானவன் மாதேவிக்காகவும் தன்னுடைய துவாவை கொண்டு இறைவனிடத்தில் கையேந்தி துவா செய்தார்கள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்றார்கள்.
இறைவன் அந்த தம்பதியினர்க்கு நான்குபிள்ளைகள் பாக்கியத்தை அடுத்தடுத்து அருளினான்.
அவர்களின் பெயர்கள்:
1)ஆதித்திய கரிகாலச் சோழன்.
2) குந்தவை நாச்சியார் என்கிற ஹலிமா நாச்சியார்.
(இவரே இஸ்லாத்தை தழுவி தப்லே ஆலம் நத்தஹர்வலி நாயத்தின் வளர்ப்பு மகளாக இருந்து பின்பு அங்கேயே அடக்கம் ஆகியிருக்கிறார்கள்)
3)உத்தமச் சோழன்.
4)இராஜராஜ சோழன.
பின்பு காஞ்சிபுரம் அரண்மனையில் சிறை வைக்கப்பட்ட சுந்தரச்சோழன் பார்ப்பனர்களால் தன்னுடைய மகன் ஆதித்தியகரிகாலச்சோழன் கொல்லப்பட்டான் என்ற செய்தியை கேட்டு துக்கத்திலேயே காஞ்சியில் மரணிக்கிறான் அவனின் எறி உடலுடனே 'சிதை'யாகிறால்.
வானவன்மகாதேவி அதன் பின்பு அரியனை வருகிற உத்தமச்சோழனால் (கிபி 970-985) தங்களின் உயிருக்கு ஆபத்து நேர்வதையறிந்து இராஜராஜ சோழனும் அவர்களின் தமக்கையான குந்தவை நாச்சியார் (எ) ஹலிமா நாச்சிரை தன்பொறுப்பில் வைத்து சுமார் பன்னிரண்டு வருடத்திற்குமேல் பல இடங்களில் மறைத்து வைத்து காப்பாற்றினார்கள் என்கிறது வரலாறு.
பின்னால் இராஜராஜனுக்கு நாடுபிடிக்கும் ஆசைபோனதற்கும் அன்பும் அறநெறியும் தழைத்தோன்பதற்கு நத்தஹர்வலியே மூலக்காரணமாக இருந்தார்கள் என்று சிலநூல்கள் குறிப்பிடுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
கிபி10ஆம் நூற்றாண்டில் எப்போது நத்ஹர்வலி தென்னிந்தியாவுக்கு எப்போது வந்தார்களோ அப்போதே பக்கிர்களின் கால்தடம் பதிய ஆரம்பிக்கப்பட்டன .
அவர்களின் வாழ்வு எளிமையும் எதார்த்தமும் ஆனது, இறைவனை தரிசிப்பதில் மட்டுமே தன்னுடைய நாட்களையும் சிந்தனைகளையும் செலுத்துவார்கள், அவ்வாறே அவர்களின் போதனைகளும் செயல்களும் பலதரப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தன.
சமூக ஒற்றுமைக்கு இவர்களின் பங்கு இன்றியமையாதவை, அவற்றில் சில...
பக்கீர்களின் தோற்றம் அவர்கள் இந்த மானுட சமுதாயத்திற்காக அவர்கள் ஆற்றிய பெரும்பங்கு மருத்துவம், இறைஞானம், சுதந்திரப்போரில் அவர்களின் அளப்பெரிய தியாகம் என்று ஒற்றைச்சொல்லில் அடக்கிவிடமுடியாது.
திப்புசுல்தானுக்கு அவர்களின் வாரிசுகளுக்கு இவர்களால் செய்யப்பட்ட தியாகவரலாறு என்று எண்ணில் அடங்காதவை.
சிவகங்கையில் வெட்டுன்டையார் என்ற கோவில் இன்றும் உண்டு வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்காமல் உமையால் என்ற இஸ்லாமிய சிறுமி தலைதுண்டிக்கப்பட்டு மரணமாக்கபட்டாள்
மீண்டும் வேலுநாச்சியார் திப்புசுல்தான் ஹைதர் அலியின் உதவியைக்கொண்டு சிவகங்கை சீமையை வெற்றி கொள்கிறார், அப்போதே இந்த உமையால் நினைவாகவே வேலுநாச்சியார் இவரின் தியாகத்தைப் போற்றுவதற்கு வெட்டுன்டையால் கோவிலை கட்டுகிறார்.
இன்றைக்கும் இந்து முஸ்லீம் பக்கீர்கள் ஒன்றுகூடி அவர்களின் தியாகப் பாடல்களை பாடி நினைவு கூறுகிறார்கள்.
இன்றைக்கும் காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், பக்கத்தில் இந்துப்பெருமக்கள் உமறம்மாள், உமர்த்தேவர்,உமர்க்கோனார், உமர்ப்புலவர் என்ற இஸ்லாமியரால் சீறாப்புராணம் இயற்றப்பட்டது என்பது நாம் அறிந்ததே.
அதுபோல் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த காயல் முஸ்லீம்கள் சிலர் உதயமார்த்தாண்ட காஜியார், அவுதுல் காபவு நயினார், ஆலிம்முடி செம்பகராம முதலியார், செய்யது அஹமது வீரபாண்டிய முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார் என்று தெரிகிறது.
சேரன் உதயமார்த்தாண்டவர்மன் (1383-1444) காயலில் இருந்து வீரமார்த்தாண்டம் செல்லும் வழியில் மக்தூம் என்ற பள்ளிவாசலை நிறுவினான், பின்னாலில் இப்பள்ளிவாசலை காஜியார் அபூபக்கர் என்பவர் உதயமார்த்தாண்ட பெரும்பள்ளி என்று பெயர் மாற்றினார் இப்படி பல பல செயல்களுக்கு பின்னால் இருந்தவர்கள் பக்கீர்களாகவே இருக்கிறார்கள்.
மூன்னோர்கள் செய்த தியாகங்களையும் அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் நினைவுப்படுத்தி வெளிப்படுவதே சூஃபியிசத்தின் ஒருபங்கு இறைவனின் பாதையில் இறைவனோடு ஒன்றினைந்து பல பல ஊர்களுக்கு நாடி நடந்து செல்வதுநாளேயே இறைவனை அன்பால் அடையமுடியும் என்பது அவர்களின் கூற்று.
ஆனால் இன்றைக்கு நம் சமுதாயத்தில் பார்வையில் இவர்கள் சாம்பிராணிபோடும் பாய்களாகவும் வீட்டிற்கு வரும் மிஷ்கீனாகவும் பார்க்கிறோம் அவர்களின் தூய வரலாறுகளை பல வரலாற்று ஆதாரச்சம்பவங்களை ஆய்வுக்கூறாக எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கள் 💐