Sunday, April 30, 2023

தேச பக்தி

 தேச பக்தி - இந்திய விடுதலை போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு .




Saturday, April 08, 2023

#பிரியாவிடை_முத்தம்

#பிரியாவிடை_முத்தம்


படத்தில் இடது புறத்தில் 7 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே தாயின் கைகளில் புதிதாகப் பிறந்த குழந்தை, வலதுபுறத்தில் மருத்துவர் அழுகிறார்.

தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததினால் குழந்தை சாதாரணமாக பிறக்கவில்லை.
அவள் 11 வருடங்கள் பொறுமையாக காத்திருந்தாள், எல்லாம் வல்ல இறைவனிடம் தனக்கு ஒரு குழந்தையைத் தருமாறு வேண்டினாள், அறுவை சிகிச்சையின் பலன் குழந்தை அல்லது குழந்தையின் தாயைக் காப்பாற்றும் என்ற ஒற்றை தெரிவு தெளிவாக இருந்தது.
மருத்துவர்கள் 7 மணி நேரமாக போராடி எவ்வளவோ முயற்சி செய்தாலும் அவர்களால் குழந்தையையும் தாயையும் ஒன்றாகக் காப்பாற்ற முடியவில்லை.
கடைசியில், அவள், தாயானவள் தன் உயிரை பணயம் வைத்து அவளின் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டதை செய்ய டாக்டர் முடிவு செய்தார்.குழந்தை பிறக்கின்றது. குழந்தையை தாயிடம் கொடுக்கின்றனர். கடைசியாக குழந்தையை இரண்டு நிமிடங்கள் நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு புன்னகைக்க அவளின் கண்கள் நிரந்தரமாக மூடிக்கொள்கின்றது.
குழந்தை ஏதும் அறியாமல் அழுகிறது.......
என்ன அற்புதம் தாய்மை....இனி என்றும் பார்க்க முடியாத வாழ்க்கையைத் தந்தவளுக்கு என்றென்றும் உயிரைகொடுத்தும் வாழவைக்கும் உணர்வு.. இருவருக்கும் எவ்வளவு குறுகிய சந்திப்பு, தாய் இல்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய நீண்ட வேதனை..!
பிள்ளைகள் வாழ்வதற்காக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் பிரசவத்தின்போது இறக்கின்றனர்.
தாயே! நீ எவ்வளவு உயர்ந்தவள், உன் காலடியில் எனது சுவனம் இருக்க உனக்கு அவ்வளவு தகுதியும் இருக்கிறது..!
பிரசவத்தில் போது இறந்த தாயின் புகைப்படத்தை அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பகிர்ந்தபோது இதயம் அன்றே உடைந்து போனது.
"இன்று என் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள்," என்று அவர் எழுதினார்.
"ஒரு மருத்துவராக, நான் பல கர்ப்பிணிப் பெண்களை கையாண்டிருக்கிறேன், நான் பிரசவ அறையில் இருக்கும் போதெல்லாம், எல்லா தாய்மார்களையும் பாதுகாத்து அருள்புரியவேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்”.
மருத்துவர் மேலும் எழுதினார்;
“அவர் 11 வருடங்கள் குழந்தை ஒன்றுக்காக ஏங்கினார்,அனைத்து வகையான மருத்துவங்களையும் செய்தார், ஊசி மருந்துகள் செயற்கையாக கருக்கட்டல்கள் என பலதையும் செய்தார்”
“அதிக்ஷ்டமாக அவள் கர்ப்பிணியானாள்.ஆனால் துரதிக்ஷ்டமாக அவளின் வயிற்றில் ஒரு கட்டி இருந்தது, நாளாக நாளாக கட்டி கரைந்தது,எல்லாம் நல்லபடியாக தோன்றியது,ஆனால்...”
"ஒரு பெண்ணின் பிரசவ வலி தாங்க முடியாதது.நீள அகலங்களினால் வரையறுக்க முடியாதது. அதில் அவள் ஒன்பது மாதங்கள் குழந்தையை சுமப்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய உயிரின் பிறப்பும் அடங்கும். இன்று நாங்கள் கதறி அழுதோம், ஒரு தாயை இழந்துவிட்டோம்.” என எழுதினார்.
“தயவு செய்து பெண்களுக்கு கண்ணியமளியுங்கள்,அவர்கள் உங்களுக்கு வாழ்வுதர இறந்து பிழைக்கின்றனர். பிரசவவலியும் அல்லல்படும் அவளின் இரவுகளும் அவளின் இணையற்ற தியாகங்கள்”
பிரசவ வேதனைக் குறித்து மர்யம் (அலை) பிரசவ வேதனையின் உச்சக்கட்டத்தில் கூறியதை அல்குரான் குறிப்பிடுகின்றது.
“இதற்கு முன்னதாகவே நான் இறந்து முற்றிலும்மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்க வேண்டுமே” --- அல்குரான் ( 16:23)
ஒருவழியாக மரணத்தை தொட்டு விடுகிற அளவிலான பிரசவ வேதனையை அனுபவித்து குழந்தையை பெற்று எடுக்கிறாள்.
ஆனால், தாயிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்...?
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவரையும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் பலவீனத்துக்குமேல் பலவீனம் அடைந்தவளாக அவனை சுமந்தாள் என்கிறான் இறைவன்.
(திருக்குர்ஆன்: 31:14)
“இறைவா, என்னை சிறு பிராயத்தில் என் பெற்றோர்கள் என் மீது இரக்கம் காட்டியதைப் போல அவர்களின் மீதும் நீ உன் இரக்கத்தை நிரப்பமாக தந்தருள் புரிவாயாக”
அல்குரான் (17:24)