Friday, January 03, 2014

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்!

    புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை:
    சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!
      உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:
      "உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்."
        மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்:
        "இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது."
          ஒரு கம்யூனிஸ்ட் தொழிலளியின் கல்லறை வாசகம்:
          "இங்கும் புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகின்றான்."
            அரசியல்வாதியின் கல்லறை மீது எழுதப்பட்ட வாசகம்:
            "தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்துவிடப்போகிறான்."

            No comments: