Wednesday, January 10, 2024

ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்!

 தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி...


மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும். 

ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும்  கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.

நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு.

புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது......

இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான்........

மக்கள் சிந்திக்க வேண்டும் நம் மூன்று மணி நேரம் பார்க்கும் திரைப்படத்திற்கே 100 200 500 என்று கொடுத்து பார்த்து‌ விட்டு வருகிறோம்‌  எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிட்டு வருகிறோம்....

ஆனால் ஒரு விவசாய ‌‌‌ 

பயிர் செய்து மூன்று நான்கு மாதம்  உழைத்தால வரும் காய்கறிகள் பேரம் பேசுகிறார்கள் சிந்திங்கள். ...

இந்த உலகில் எது இல்லை என்றாலும் வாழ்ந்து விடலாம் ஆனால் உணவு இல்லை என்றால் வாழ முடியாது...

ஒரு விவசாயி தெய்வத்துக்கு சமம்....

விவசாயத்தை காப்போம் ....

(படித்ததில் பிடித்தது...)

Tuesday, January 09, 2024

Ayothi Ram Temple



#இடம் : அயோத்தி

#வழக்கு : முன்பு  இருந்த கோவிலை இடித்து..அதில் பாபர் மசூதி கட்டபட்டது..

#உயர்_நீதிமன்ற_தீர்ப்பு :  இடித்தவர்களுக்கு 3 ல் 2 பகுதியும்..பாதிக்கபட்டவர்களுக்கு 3 ல் 1 பகுதி இடத்தையும் பிரித்து கொடுக்க வேண்டும்..

#உச்ச_நீதிமன்ற_தீர்ப்பு : *இடிக்கபட்ட மசூதியின் கீழ் கோவில் இருந்ததற்க்கான  அடையாளம் இல்லை..*மசூதி இடிக்கபட்டது தவறு..*ஆனால் ராமர் அவ்விடத்தில்தான் பிறந்தார் என்று பெரும்பான்மையான மக்கள் நம்புகிறார்கள்.எனவே இடித்தவர்களுக்கு இடம் சொந்தம்..

#அநீதி_வழங்கியதற்க்கு_பரிசு : ராஜ்யசபா உறுப்பினர்..

#வரலாறு : கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டவில்லை...பாபர் மசூதியை இடித்துதான் ராமனுக்கு கோவில் கட்டபட்டுள்ளது..

Via FB

Monday, January 01, 2024

Pension system!

 


#Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.


ஒரு நாள் உமர் (ரழி) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.


உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்? 


அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன். உங்களுக்கு வரி கட்டவும், மீதமுள்ளதை எனது குடும்பத்திற்குக் கொடுக்கவும் மக்களிடம் யாசகம் கேட்கிறேன் என்றார்.


உமர் (ரழி) அவர்கள் இரக்கப்பட்டு மனமுருகிச்

சொன்னார்கள், என்ன நீதி செலுத்துகிறோம் வயதானவர்களான உங்கள்மீது....?


நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களிடம் வரியை வாங்கிக்கொள்கிறோம். வயதானபோது அப்படியே விட்டுவிடுகிறோமே...!? என்று சொல்லிவிட்டு

பின்னர் அந்த வயதான யூதரின் கையைப் பிடித்துக் கொண்டு தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு உணவளித்தார்கள்.


மேலும் அரசுக் கருவூலப் (பைத்துல் மால்) பொறுப்பாளரிடம் இவருக்கும், இவரைப் போன்ற வயோதிகர்களுக்கும் வரி வாங்கக் கூடாது என்றும் , மேலும் மாதம்தோறும் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும் குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சட்டமியற்றி கட்டளை பிறப்பித்தார்கள் ...


அல்லாஹ் உமர் ரழி அவர்களை பொருந்திக்கொள்வானாக!


📚 கிதாப் அஹ்லு திம்மதில் இப்னு கய்யிம் ஜவ்ஸிய்யா


📚 கிதாபுல் அம்வால்- லிஅபீ அபீத் அல் காஸிம் இப்னு ஸலாம்..