தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி...
மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும் கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.
படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.
இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.
ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.
பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.
நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.
இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு.
புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது......
இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான்........
மக்கள் சிந்திக்க வேண்டும் நம் மூன்று மணி நேரம் பார்க்கும் திரைப்படத்திற்கே 100 200 500 என்று கொடுத்து பார்த்து விட்டு வருகிறோம் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிட்டு வருகிறோம்....
ஆனால் ஒரு விவசாய
பயிர் செய்து மூன்று நான்கு மாதம் உழைத்தால வரும் காய்கறிகள் பேரம் பேசுகிறார்கள் சிந்திங்கள். ...
இந்த உலகில் எது இல்லை என்றாலும் வாழ்ந்து விடலாம் ஆனால் உணவு இல்லை என்றால் வாழ முடியாது...
ஒரு விவசாயி தெய்வத்துக்கு சமம்....
விவசாயத்தை காப்போம் ....
(படித்ததில் பிடித்தது...)
No comments:
Post a Comment