Wednesday, June 25, 2025

முஸ்லிம்கள் உலகிற்கு என்ன கொடுத்தார்கள்❓❓❓

 முஸ்லிம்கள், குறிப்பாக இஸ்லாமிய பொற்காலத்தில் (8-14 ஆம் நூற்றாண்டுகள்), அறிவியல், மருத்துவம், கலை மற்றும் கலாச்சாரம் முழுவதும் உலகளாவிய நாகரிகத்திற்கு பெரும் பங்களிப்புகளைச் செய்தனர். சில முக்கிய பகுதிகள் இங்கே:


1. அறிவியல் & கணிதம்

- இயற்கணிதம்: அல்-குவாரிஸ்மி (அவரது பெயர் நமக்கு "வழிமுறை" என்ற வார்த்தையைக் கொடுத்தது) உருவாக்கியது.

- அரபு எண்கள்: இன்று பயன்படுத்தப்படும் எண் அமைப்பு (0–9) முஸ்லிம் அறிஞர்களால் சுத்திகரிக்கப்பட்டு பரப்பப்பட்டது.

- வானியல்: முஸ்லிம்கள் ஆய்வகங்களை உருவாக்கினர், நட்சத்திரங்களை வரைபடமாக்கினர் மற்றும் மேம்படுத்தப்பட்ட நாட்காட்டிகளை உருவாக்கினர்.

- ஒளியியல்: இப்னு அல்-ஹைதம் (அல்ஹாசன்) நவீன ஒளியியல் மற்றும் அறிவியல் முறையின் அடித்தளத்தை அமைத்தார்.


2. மருத்துவம்

- மருத்துவமனைகள்: ஆரம்பகால மருத்துவமனைகள் இஸ்லாமிய உலகில் வார்டுகள், மருந்தகங்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் கட்டப்பட்டன.

- அறுவை சிகிச்சை கருவிகள்: அல்-ஜஹ்ராவியால் உருவாக்கப்பட்டது, அதன் கருவிகள் மற்றும் நுட்பங்கள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டன.

- மருத்துவ நூல்கள்: இப்னு சினாவின் "மருத்துவ நியதி" 500+ ஆண்டுகளாக ஐரோப்பாவில் ஒரு நிலையான மருத்துவ பாடப்புத்தகமாக இருந்தது.


3. கட்டிடக்கலை & கலை

- மசூதிகள் & குவிமாடங்கள்: ஸ்பெயினில் உள்ள அல்ஹம்ப்ரா மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள நீல மசூதி போன்ற சிக்கலான வடிவியல் வடிவமைப்புகள், கையெழுத்து மற்றும் கட்டிடக்கலை.

- கையெழுத்து: உயர் கலை வடிவமாக உயர்த்தப்பட்டது, குறிப்பாக மத மற்றும் கட்டிடக்கலை அலங்காரத்தில்.


4. தத்துவம் & இலக்கியம்

- தத்துவம்: மொழிபெயர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட கிரேக்க நூல்கள்; அவெரோஸ் (இப்னு ருஷ்ட்) மற்றும் அவிசென்னா போன்ற சிந்தனையாளர்கள் ஐரோப்பிய சிந்தனையை பாதித்தனர்.

- கவிதை & இலக்கியம்: "ஆயிரத்தொரு இரவுகள்" போன்ற படைப்புகளும் ரூமி போன்ற கவிஞர்களும் உலகளாவிய கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


5. வர்த்தகம் & பொருளாதாரம்

- வங்கி & கடன்: உலகளாவிய வர்த்தகத்தில் காசோலைகள் (சக்) மற்றும் கடன் கடிதங்கள் போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது.

- உலகளாவிய வர்த்தக வலையமைப்புகள்: பொருட்கள் மற்றும் யோசனைகளுடன் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைத்தது.


6. கல்வி

- பல்கலைக்கழகங்கள்: அல்-கராவியின் (மொராக்கோ) மற்றும் அல்-அஸ்ஹர் (எகிப்து) போன்ற நிறுவனங்கள் உலகின் பழமையானவை.

- நூலகங்கள் & மொழிபெயர்ப்பு: பாக்தாத்தில் உள்ள ஞான இல்லம் கிரேக்கம், பாரசீகம் மற்றும் இந்திய மூலங்களிலிருந்து முக்கிய நூல்களை மொழிபெயர்த்தது.


முஸ்லிம் அறிஞர்கள் பண்டைய அறிவைப் பாதுகாத்து விரிவுபடுத்தினர், நாகரிகங்களுக்கு பாலமாக இருந்தனர் மற்றும் பல துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்தை முன்னேற்றினர்.


Wednesday, January 10, 2024

ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்!

 தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி...


மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும். 

ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும்  கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.

நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு.

புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது......

இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான்........

மக்கள் சிந்திக்க வேண்டும் நம் மூன்று மணி நேரம் பார்க்கும் திரைப்படத்திற்கே 100 200 500 என்று கொடுத்து பார்த்து‌ விட்டு வருகிறோம்‌  எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிட்டு வருகிறோம்....

ஆனால் ஒரு விவசாய ‌‌‌ 

பயிர் செய்து மூன்று நான்கு மாதம்  உழைத்தால வரும் காய்கறிகள் பேரம் பேசுகிறார்கள் சிந்திங்கள். ...

இந்த உலகில் எது இல்லை என்றாலும் வாழ்ந்து விடலாம் ஆனால் உணவு இல்லை என்றால் வாழ முடியாது...

ஒரு விவசாயி தெய்வத்துக்கு சமம்....

விவசாயத்தை காப்போம் ....

(படித்ததில் பிடித்தது...)

Tuesday, January 09, 2024

Ayothi Ram Temple



#இடம் : அயோத்தி

#வழக்கு : முன்பு  இருந்த கோவிலை இடித்து..அதில் பாபர் மசூதி கட்டபட்டது..

#உயர்_நீதிமன்ற_தீர்ப்பு :  இடித்தவர்களுக்கு 3 ல் 2 பகுதியும்..பாதிக்கபட்டவர்களுக்கு 3 ல் 1 பகுதி இடத்தையும் பிரித்து கொடுக்க வேண்டும்..

#உச்ச_நீதிமன்ற_தீர்ப்பு : *இடிக்கபட்ட மசூதியின் கீழ் கோவில் இருந்ததற்க்கான  அடையாளம் இல்லை..*மசூதி இடிக்கபட்டது தவறு..*ஆனால் ராமர் அவ்விடத்தில்தான் பிறந்தார் என்று பெரும்பான்மையான மக்கள் நம்புகிறார்கள்.எனவே இடித்தவர்களுக்கு இடம் சொந்தம்..

#அநீதி_வழங்கியதற்க்கு_பரிசு : ராஜ்யசபா உறுப்பினர்..

#வரலாறு : கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டவில்லை...பாபர் மசூதியை இடித்துதான் ராமனுக்கு கோவில் கட்டபட்டுள்ளது..

Via FB

Monday, January 01, 2024

Pension system!

 


#Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.


ஒரு நாள் உமர் (ரழி) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.


உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்? 


அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன். உங்களுக்கு வரி கட்டவும், மீதமுள்ளதை எனது குடும்பத்திற்குக் கொடுக்கவும் மக்களிடம் யாசகம் கேட்கிறேன் என்றார்.


உமர் (ரழி) அவர்கள் இரக்கப்பட்டு மனமுருகிச்

சொன்னார்கள், என்ன நீதி செலுத்துகிறோம் வயதானவர்களான உங்கள்மீது....?


நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களிடம் வரியை வாங்கிக்கொள்கிறோம். வயதானபோது அப்படியே விட்டுவிடுகிறோமே...!? என்று சொல்லிவிட்டு

பின்னர் அந்த வயதான யூதரின் கையைப் பிடித்துக் கொண்டு தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு உணவளித்தார்கள்.


மேலும் அரசுக் கருவூலப் (பைத்துல் மால்) பொறுப்பாளரிடம் இவருக்கும், இவரைப் போன்ற வயோதிகர்களுக்கும் வரி வாங்கக் கூடாது என்றும் , மேலும் மாதம்தோறும் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும் குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சட்டமியற்றி கட்டளை பிறப்பித்தார்கள் ...


அல்லாஹ் உமர் ரழி அவர்களை பொருந்திக்கொள்வானாக!


📚 கிதாப் அஹ்லு திம்மதில் இப்னு கய்யிம் ஜவ்ஸிய்யா


📚 கிதாபுல் அம்வால்- லிஅபீ அபீத் அல் காஸிம் இப்னு ஸலாம்..

Friday, November 10, 2023

A story of Olives and Cactus




“Wherever you see cactus, know there was a Palestinian village in that place ” . That’s what they tell you if you ever visit the West Bank. Israel has been removing, bulldozing , erasing villages and cities for decades to terraform the land . But the problem is , Cactus keeps growing back . No matter how they try to destroy the land and the soil and build their settlements , cactus keep coming back.  

A friend of mine just came back from there carrying a gift for me :  Locally squeezed olive oil from a her village in the West Bank . “Forget the commercial stuff you buy from stores. We squeeze oil in our own villages.” 

They squeeze the olives on the stone mills, use clean dedicated straw bags to squeeze it on the extruding machines . Same process that has been done for 100,200, 400 maybe 600 years . As old as these trees. You take a product of the land , squeeze it to its limits and you get that pure green gold. 

A healing potion of life . 

“Just put some oil” is the answer for everything in Palestine. Hungry ? Add oil. A bit sick ? Rub oil. Want to feel better about the world? Oil as old as the earth is there for you. They are not just olive trees. They are family . They are there to feed you , heal you and take care of you. How can you uproot a member of the family and call this land yours ? I have no idea . The trees don’t agree with that . And cactus definitely don’t agree with that. Maybe we got it all wrong! Maybe olive trees are not just an extension of Palestinian heritage. Maybe, Palestinians themselves are an extension of the land . They are like the trees . You can beat them , you can pressure them , you can squeeze them and push them beyond any human limits. But they don’t die . Like crushed olives that produce green gold.  And from death, a million lives will be born. And their  pain will eventually be the healing potion for all of us. 

And if you try to uproot them , they won’t go away . You think they will. But they come back. Like cactus . To defy you , to stand up for you , take your abuse and prick you back. They are there , to stay . Forever

By Bassam Youssef @Byoussef

Friday, October 27, 2023

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு!

 விழிபுணர்வு_பதிவு💞👇🙏🏻

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்
பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.
மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு
S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
S T R அதாவது,
SMILE (சிரிக்க சொல்வது 😄),
TALK (பேச சொல்வது😲),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)
இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!
உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,
அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, ம* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!!

Saturday, October 14, 2023

Homeland!

"I’m personally a Holocaust survivor as an infant, I barely survived. My grandparents were killed in Aushwitz and most of my extended family were killed. I became a Zionist; this dream of the Jewish people resurrected in their historical homeland and the barbed wire of Aushwitz being replaced by the boundaries of a Jewish state with a powerful army…and then I found out that it wasn’t exactly like that, that in order to make this Jewish dream a reality we had to visit a nightmare on the local population.

There’s no way you could have ever created a Jewish state without oppressing and expelling the local population. Jewish Israeli historians have shown without a doubt that the expulsion of Palestinians was persistent, pervasive, cruel, murderous and with deliberate intent - that’s what’s called the 'Nakba' in Arabic; the 'disaster' or the 'catastrophe'. There’s a law that you cannot deny the Holocaust, but in Israel you’re not allowed to mention the Nakba, even though it’s at the very basis of the foundation of Israel.

I visited the Occupied Territories (West Bank) during the first intifada. I cried every day for two weeks at what I saw; the brutality of the occupation, the petty harassment, the murderousness of it, the cutting down of Palestinian olive groves, the denial of water rights, the humiliations...and this went on, and now it’s much worse than it was then.

It’s the longest ethnic cleansing operation in the 20th and 21st century. I could land in Tel Aviv tomorrow and demand citizenship but my Palestinian friend in Vancouver, who was born in Jerusalem, can’t even visit!

So then you have these miserable people packed into this, horrible…people call it an 'outdoor prison', which is what it is. You don’t have to support Hamas policies to stand up for Palestinian rights, that’s a complete falsity. You think the worse thing you can say about Hamas, multiply it by a thousand times, and it still will not meet the Israeli repression and killing and dispossession of Palestinians.

And 'anybody who criticises Israel is an anti-Semite' is simply an egregious attempt to intimidate good non-Jews who are willing to stand up for what is true."

By @BrownNaila

Via twitter

Monday, August 28, 2023

இன்னைக்கும் வெள்ளக்காரன் கொடுத்த அறிவியல் தான் நம்மை முன்னேற்றி இருக்கிறது.

இன்னைக்கும் வெள்ளக்காரன் கொடுத்த அறிவியல் தான் நம்மை முன்னேற்றி இருக்கிறது.

வெள்ளைக்காரன் வெளியே போனா வடநாட்டவரிடம் நாம் அடிமையாக நேரிடும்.. பார்ப்பனர்களின் கையில் அதிகாரம் போகும். வெள்ளக்காரன் நமக்கு கொடுத்த அனைவருக்குமான கல்வியை பார்ப்பனர்கள் தடை செய்வார்கள்.. நம் பிள்ளைகள் அறிவியல் படிக்க இயலாமல் போகும்.. நம்மால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது... மீண்டும் குலதொழிலுக்கு தள்ளப்படுவோம் என்றார் #பெரியார்.. 

அவர் சொன்னது போலவே #ராஜாஜி எனும் பார்ப்பனர்  பள்ளிகளை மூடினார்.  குலக்கல்வியை கொண்டுவர முயற்சி செய்தார் . அதை போராடி தடுத்து 

ராஜாஜி பதவி விலக காரணமாக இருந்தவர் பெரியார்.. 

#காமராஜர் போட்டியிட்ட குடியாத்தம் தேர்தலில் காமராஜரை எதிர்த்து போட்டியிட்டவர்களை

வாபஸ் வாங்க செய்தார் பெரியார்.. 

கம்யூனிஸ்டுகளை தவிர அனைவரும் வாபஸ் வாங்க காமராஜரின் வெற்றி உறுதியானது.. 

காமராஜர் முதல்வரானதும் ராஜாஜி மூடிய 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார்.. மேலும் அதிகமான பள்ளிகளை திறந்தார்..

மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.. 

காமராஜர் பெரியாருடன் மேடைகளில் பங்கெடுத்தார்.. சமூகநீதி அரசியலை திறம்பட மேற்கொண்டார்..

காமராஜர் பெரியார் பேச்சை கேட்டு ஆடுவதாக பார்ப்பன பத்திரிக்கைகள் காமராஜரை விமர்சித்தன.. 

பள்ளிகளில் கடவுள் வாழ்த்து பாடலுக்கு பதிலாக காமராஜர் வாழ்த்து பாடுங்கள் என்றார் பெரியார்.. 

👉 வரலாற்றை படிக்காத தற்குறி முண்டங்களே அவதூறு பரப்பி சொறிந்து

கொள்வதை நிருத்துங்கள்

பதிவு : Mithran Kandasamy 👌

திருமணம் முடித்தவர்கள் முடிக்கவிருப்பவர்கள் கட்டாயமாக வாசித்து, விழிப்புணர்வு அடைந்து கொள்ளுங்கள்.

 கொஞ்சம் பெரிய கட்டுரைதான்; ஆங்கில கட்டுரை. தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்; நேரமெடுத்து நிதானமாக வாசியுங்கள். குறிப்பாக திருமணம் முடித்தவர்கள் முடிக்கவிருப்பவர்கள் கட்டாயமாக வாசித்து, விழிப்புணர்வு அடைந்து கொள்ளுங்கள். உண்மையான சம்பவம் ஒன்றே இது.

️1️⃣ ஒரு அழகான காதல் கதைக்குப் பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், இரண்டு வாரங்களுக்குப் பிறகு கணவர் வேலைக்குச் செல்ல எழுந்தார். முகத்தை கழுவ குளியலறை சென்றவர், கண்ணாடியில் அவருடைய முகத்தில் விதவிதமான வண்ணங்கள் வரைந்த ஓவியங்கள் தெரிந்தது. அவரது மனைவி இளமையாகவும், குழந்தையாகவும், அப்பாவி இதயமுடையவளாகவும் இருந்தாள். அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவள்தான் அவனது முகத்தில் வரைந்து வைத்திருக்கிறாள், காலையில் தன்னுடைய அன்பு கணவர் அதைப் பார்த்து சிரிக்க வேண்டும் என்று அவள் மிகுந்த அன்புடன் அப்படி செய்தாள். கணவர் வருத்தத்துடன் முகம் கழுவி விட்டு, தினமும் காலையில் வழக்கமாக செய்யும் தேநீர் குடிக்க சமையலறைக்குச் சென்றார். அவனது தேநீரை காணவில்லை, அவன் மேலும் வருத்தமடைந்து அவளிடம் சென்றான்.


2️⃣ தன் கணவர் தன்னைப் பார்த்து சிரிப்பார், ஏதோ காதல் பாஷை பேசுவார் என்று நினைத்து அவள் சிரித்தாள். ஆனால், நடந்தது வேறு; அவள் கீழே விழும் வரை அவளை அறைந்தான், மேலும் அவளிடம் கத்தினான்: “நான் உன்னுடன் விளையாடுவதற்காக உன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை, நான் ஒரு ஆண்; சிறு குழந்தை அல்ல. எல்லோர் பார்வையிலும் ஆணாக இருக்க, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள, குடும்பம் நடத்தவே உன்னை மணந்தேன். நீ படிக்கும் நாவல்களின் காதல் கதையாக வாழ விரும்புகிறாயா? எழுந்திரு, இந்தக் கதைகள் எல்லாம் ஒரு வீட்டை உருவாக்குவதில்லை, உணவை வழங்குவதில்லை, குழந்தைகளை வளர்ப்பதில்லை. இன்று நான் என் நண்பர்களை மதிய உணவிற்கு அழைத்து வருவேன், நான் திரும்பி வரும் போது எல்லாம் தயாராக இருக்க வேண்டும். உனக்கு புரிகிறதா?" என்று அதட்டி விட்டு, அவன் வெளியே சென்று தன்னை வீட்டின் எஜமானராகப் பார்த்தான். 


3️⃣ அவன், அவள் மனதை உடைத்தே விட்டான்; அவளுடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் ஏளனப்படுத்தியே விட்டான் என்பது அவனுக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. அவளால் நன்றாக மூச்சு விட முடியாத அளவுக்கு ஏங்கி ஏங்கி அழுதாள், அவள் உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்த நிலையிலும் தன் கணவர் சொன்னதை செய்ய வேண்டுமென்று அவசரமாக மதிய உணவைத் தயாரிக்கச் சென்றாள், கண்ணீர் அவள் கன்னங்களை விட்டு அகலவில்லை.

https://m.facebook.com/story.php?story_fbid=1376090123343678&id=100028281103831&mibextid=Nif5oz

4️⃣ கணவன் சென்று தன் நண்பனிடம் சிரித்துக் கொண்டே நடந்ததைச் சொன்னான்: “கல்யாணம் எல்லாம் காதல், காதல் என்று நினைக்கிறார்கள். பெண்களை இப்படித்தான் நடத்த வேண்டும் நண்பரே. இல்லையேல், அவள் பொறுப்பைக் கற்றுக் கொள்ள மாட்டாள். அவள் நல்ல தாயாக இருக்க மாட்டாள். திருமணம் என்பது அவள் பார்ப்பது போலவோ, படிப்பதைப் போலவோ இல்லை என்பதை அவள் அறிந்திருக்க வேண்டும். திருமணம் என்பது விளையாட்டோ நாவலோ அல்ல என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.


5️⃣ ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர் அவரைப் போல் இல்லை, அவர் தனது உரையாடலை முடிக்க அனுமதிக்கவில்லை, அவர் அவரை வெட்டினார்: “நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்? மனைவியிடம் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறீர்கள்? ஒரு நல்ல கணவன் இப்படியா இருப்பது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெண்களிடம் மென்மையாக இருங்கள், அவர்கள் கண்ணாடி போன்றவர்கள்.) நீங்கள் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் இதயங்களை உடைக்காதீர்கள். அல்லாஹ்வின் பொருத்தமும் சாந்தியும் உண்டாவதாக என்று கூறினார்: 


6️⃣ இந்த உலகம் தற்காலிக மகிழ்ச்சி, இந்த உலகின் சிறந்த தற்காலிக மகிழ்ச்சி நேர்மையான மனைவியே. சமைப்பது மற்றும் குழந்தைகளை வளர்ப்பது பற்றி நீங்கள் சற்று முன்பு குறிப்பிட்டதைக் கவனியுங்கள், இது அவளுக்கு கட்டாயமில்லை. ஆனால், அவளிடம் நன்றாக இருப்பது - அவளுக்கு உன்னை அதிகமாக நேசிக்க வைக்கும், மேலும் உன் மீது மோகத்தை ஏற்படுத்தும், நீ அவளிடம் சொல்லாமல் அவள் இதையெல்லாம் செய்வாள். அவள் உங்கள் பணிப்பெண் அல்ல என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நண்பா, உன் சுய நினைவுக்குத் திரும்பு, அல்லாஹ்விடம் அழு, உனது மனைவியிடம் திரும்பிச் சென்று அவளைக் கெளரவித்து, அவளை மீண்டும் சோகமாக்காதே. 


7️⃣ கணவன் துக்கமடைந்து, தான் செய்ததை நினைத்து வருந்தினான். பின்னர் அவர் தனது நண்பர்களின் மதிய உணவு அழைப்பிதழை ரத்து செய்து விட்டு, அவர்களுக்கு தனியாக மதிய உணவை தயார் செய்யவும் முடிவு செய்தார். பின்னர் தன்னுடைய மனைவிக்கு Call எடுத்தார், பதில் இல்லை. விரைவாக வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அடித்தார், ஆனால் பதிலில்லை. திடீரென்று அவனது தொலைபேசி ஒலித்தது, அது அவன் மனைவியின் சகோதரன். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று உணர்ந்த அவரது மனைவி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது சகோதரரை அழைத்தார். அவருடைய மனைவியின் சகோதரர் அவரிடம், “மச்சான் / அண்ணா, நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம்” என்றார். அந்த குரலில் சோகம் நிறைந்திருந்தது, இது கணவனின் இதயத்தை கிட்டத்தட்ட கொஞ்ச நேரம் நிறுத்தியே போட்டது, மனைவிக்கு ஏதோ மோசமான நிலை என்ற எண்ணம். உடனே அவர் டாக்ஸியை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் கண்டார். அவர்கள் முகத்தில் சோகம் தெரிந்தது, அவர்கள் தன் மீது கோபப்படுவார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியாததால், அவரை எல்லோரும் வாழ்த்தி விட்டு மருத்துவருக்காக காத்திருந்தனர். 


8️⃣ பல மணி நேரங்களுக்குப் பிறகு, மருத்துவர் அவர்களிடம் தலை குனிந்து வெளியே வந்து அவர்களிடம் கூறினார்: "மிகுந்த சோகத்துடனும் துக்கத்துடனும் கூறுகிறேன், அல்லாஹ் அவள் மீது கருணை காட்டட்டும், She is not with us longer anymore." என்றார். எல்லோரும் அழுதார்கள், குறிப்பாக கணவர். அவர் வருந்தினார் மற்றும் தன்னை குற்றம் சாட்டினார். அவளுடைய தாய் அவளைக் குளிப்பாட்டினாள், அவள் அதே நாளில் அடக்கம் செய்யப்பட்டாள். மாலை நேரத்தில் கணவர், இறந்த மனைவியின் சகோதரனிடம் சாவியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். அவர் வீட்டிற்குள் நுழைந்தார், அட்டையால் ஏதோ ஒன்று மூடப்பட்டிருப்பதை கண்டார். அவர் அட்டையை அகற்றி, சிறந்த சுவையான உணவுகளைக் கண்டு பிடித்தார், குளிர்சாதன பெட்டியின் கதவில் ஒரு காகிதம் தொங்குவதைக் கண்டார். 


9️⃣ அதில்: “என் அன்பே, நான் வருந்துகிறேன், ஏனென்றால் நீங்கள் பழகி வைத்திருக்கும் உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை உடைக்க விரும்பினேன். ஏனென்றால், நீங்கள் இந்த கல் இதயத்திலிருந்து வெளியேற வேண்டும், மேலும் உங்களிடமிருந்து சில காதல் வார்த்தைகளைக் கேட்க வேண்டும், என்னைக் கட்டிப்பிடித்து நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும் என்றுதான் நான் அப்படி செய்தேன். என்னை மன்னியுங்கள், என் குழந்தைத்தனமான மனதை அப்படியே ஏற்று - நீங்கள் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். உங்கள் நண்பர்கள் உணவை விரும்புவார்கள் என்று நம்புகிறேன், மேலும் நான் உங்களை ஒரு போதும் வருத்தப்படுத்த மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன், நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன்." என்று எழுதப்பட்டிருந்தது.


🔟 அவர், மேசையைப் பார்த்து, உணவை எல்லா இடங்களிலும் எறிந்தார், மேலும் அழுது, அழுது, உட்கார்ந்து கூறினார்: "என் அன்பே, நான் உன்னை என்ன செய்தேன்? என் கொடுமையால் உன்னைக் கொன்றேன், என்னை மன்னித்து விடு." என்று கதறி கதறி கூறினார் அந்த கணவர்..


இன்றைய இந்த உலகம் பக்கத்திலே இருக்கும் போது யாரும் யாரையும் புரிந்து உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்..


- மூலமொழி: ஆங்கிலம்

- Unknown Person || தமிழில்: றஜா முஹம்மத்

Sunday, August 06, 2023

இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது?

இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது?



தயவுசெய்து சிறிது நேரம் செலவிடுங்கள் ஆச்சரியமான கட்டுரை..

இஸ்லாம் பயங்கரவாதம் என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்!

-ரஞ்சித் லால் மாதவன்..

இந்த சகோதரர் , மலையாளத்தில் மிக அருமையான ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

அதை வாசித்து கேட்டு அறிந்த உடன், தமிழில் இதை மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

அதை நான் மொழிமாற்றம் செய்து இருக்கிறேன் சற்று நீண்ட பதிவுதான் என்றாலும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய செய்தி.

அது உங்களுக்கு ரஞ்சித் லால் மாதவன் என்பவரிடமிருந்து ஒரு அழகான அறிவுரை!

உலகில் ஆண்டுக்கு 321 பில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது.

உலகில் மது விற்பனை ஆண்டுக்கு 1600 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது.

இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத வர்த்தகம் நடைபெறுகிறது

விபச்சார வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புடையது.

சூதாட்ட வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 110 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது.

தங்க வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள்.

கம்ப்யூட்டர் கேம் வணிகமானது உலகில் ஆண்டுக்கு $54 பில்லியன் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 2380 பில்லியன் டாலர் வணிகத்திற்கு எதிராக இஸ்லாம் நிற்கிறது!

(மது, போதை, விபச்சாரம், சூதாட்டம் இவை அனைத்தும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை, தடை (ஹராம்) செய்யப்பட்டுள்ள செயல்களாகும்).

1 பில்லியன் டாலர் என்றால் 7000 கோடி ரூபாய்..

2380 பில்லியன் டாலர்கள் என்றால் = 1,66,60,000 கோடி ரூபாய் (ஒரு கோடியே 66 லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய்).

2017ல் அருண் ஜேட்லி வெறும் 336 பில்லியன் டாலர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட ஒவ்வொரு தொழில்களும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் நடத்தப்படுகிறது.

மது, சாராயம், போதைப்பொருள் வியாபாரம் கூடாது என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால் ஏற்படும் விளைவு நஷ்டம் 2000 பில்லியன் டாலர் போதைப்பொருள் மாஃபியாவின் வியாபாரம்!

பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் பெட்ரோலுக்காக பிற நாடுகள் மீது படை எடுத்து அப்பாவி மக்களைக் கொல்லாமல், ரத்தம் சிந்தாமல் இருந்தால், 100 பில்லியன் டாலர் ஆயுத மாஃபியாவின் வியாபாரம் முடிவுக்கு வந்துவிடும் இஸ்லாமிய சட்டம் ஒழித்துவிடும்!

விபச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற இஸ்லாமிய கொள்கை அமலுக்கு வந்தால் விபச்சார மாஃபியாவின் 400 பில்லியன் டாலர் வியாபாரம் முடிவுக்கு வரும்!

ஆபாச வீடியோக்கள் பார்ன் வெப்சைட்டுகள் பாதிக்கப்படும்.

சூதாடக்கூடாது என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால், சூதாட்ட மாஃபியாவின் 110 பில்லியன் டாலர் வியாபாரம் முடிவுக்கு வரும்!

ஒரு பெண்ணின் நிர்வாணம் மட்டுமே அவளது தனியுரிமை, அது கண்காட்சி அல்ல என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால், 100 பில்லியன் டாலர் ஆபாச மாஃபியாவின் வியாபாரம் முடிவுக்கு வரும்!

இந்த 2300 பில்லியன் டாலர் வர்த்தகத்தின் மீது போர் தொடுத்தது இஸ்லாம்தான்..

அந்த இஸ்லாத்தை எதிர்க்காமல் வரவேற்கவா செய்வார்கள்?

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க உலக ஊடகங்களை இந்த மாஃபியாக்கள் விலைக்கு வாங்கி, இந்த மாஃபியாக்கள் வீசிய எலும்புத்துண்டுகளை தின்று ஊடக மாஃபியா வளர்ந்து செழித்திருக்கிறது.

இஸ்லாம் தீவிரவாதம் என்று பாடி நாடு முழுவதும் ஊர்வலம் சென்றனர். இந்தப் பணத்தைக் கொண்டு தீவிரவாதத்தை வளர்த்தார்கள்.

இந்த மாஃபியாக்கள் உருவாக்கும் பயங்கரவாதம் இஸ்லாமிய பயங்கரவாதம் எனப்படுகிறது!

இஸ்லாம் தீவிரவாதம் என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

அதற்காக இந்த பில்லியன் டாலர்களைக் கொண்டு அவர்களே சில முஸ்லிம்களை விலைக்கு வாங்கினார்கள்.

ஒருவரைக் கொல்வது எல்லா மக்களையும் கொல்வதற்கு சமம் என்று சொன்ன இஸ்லாம், தீவிரவாதத்தின் மதமாக மாறியது!

உங்கள் கண்களும் இதயங்களும் மதவெறியால் குருடாக்கப்படவில்லை என்றால், உங்கள் கண்களைத் திறந்து, உங்கள் இதயத்தைத் திறந்து கேளுங்கள்..

உங்கள் இறைவனின் வார்த்தைகளிலிருந்து எவ்வளவு திறமையாக அவர்கள் உங்களை விலக்கி கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை "இஸ்லாம் பயங்கரவாதம்" என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்!

"உண்மையில், மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்" திருக்குர்ஆன்!

கட்டுரை எழுதியவர்:

-ரஞ்சித் லால் மாதவன். (மலையாளத்தில்)

நன்றி 🙏

தமிழாக்கம்:

Shajahan Sahib.

- via Abulhasan Ansaam

நன்றி 🙏🙏

#படித்ததில்_பிடித்தது