1997 - ஆம் ஆண்டு இந்தியாவின் 50வது சுதந்திர தினத்தை அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி பொன்விழாவாக கொண்டாடினார்
அப்போது இந்தியாவின் விடுதலைக்கு போராடி இரத்தம் சிந்திய - சிறை சென்ற தியாகிகள் அடங்கிய கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது அதில் முஸ்லிம் தியாகிகளின் ஒரு பெயர் கூட இடம் பெறவில்லை கலைஞர் முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்தார், அல்லது மறந்தார் என்கிற குற்றசாட்டு எழுந்தது
அதே போன்று நேற்று நடந்த இந்தியாவின் சுதந்திர தின 75- ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் - தனது உரையில் சில தியாகிகளின் பெயர்களை குறிப்பிட்டார் - ஆனால் ஒரே ஒரு முஸ்லிம் தியாகியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை .
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த - மதுரை நாயகம் யூசுஃப் கான் , நேதாஜி ராணுவப் படையில் இருந்த அமீர் ஹம்சா , வ.உ.சி க்கு கப்பல் வாங்கிக் கொடுத்த வள்ளல் ஹபீப் முஹம்மது - போன்ற பல தியாகிகள் - முஸ்லிம் சமூகத்தில் இருந்தனர்
இந்திய சுதந்திரத்தை பெற்று தந்ததில் தங்களின் சக்திக்கு மீறி செயல்பட்டவர்கள் முஸ்லீம்கள் ( பார்க்க நேற்றைய எனது பதிவு ) இப்படிபட்ட முஸ்லீம் தியாகிகளின் வரலாற்றை தந்தையும் , மகனும் மறைத்து விட்டார்கள் அல்லது மறந்து விட்டார்கள் தந்தை வழியில் மகனும் செல்கிறாரோ.? என்கிற சந்தேகமும் , குற்றசாட்டும் , பழியும் இப்போதும் எழுந்துள்ளதே !
உண்மையிலேயே மறைக்கப்பட்டதா ?
வேண்டுமென்றே மறக்கப்பட்டதா ?
உணர்ச்சிவசப்படாத , திட்டி குட்டையில் வராத , திமுக கட்சிக்காரர்களிடமிருந்து சரியான விளக்கம் அல்லது பதில் எதிர்பார்க்கிறேன்… பலரின் புரிதலுக்காகவே இந்த பதிவு.
-தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments:
Post a Comment