Friday, August 20, 2021

மனித உரிமை ஆர்வலர் போல வேசம் போட்டு..


பர்மாவில் புத்த அரசால கொத்து கொத்தாக அப்பாவி முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஈராக்கில் அயோக்கிய அமெரிக்க அரசால் கொத்து கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஆப்கானில் இருபது வருடமாக அங்கே உள்ள பூர்வ குடிகளான முஸ்லிம்களைக் கொன்று அடிமைப் படுத்தி வைத்து அங்கே கொள்ளை அடித்துக் கொண்டு இருந்த அயோக்கிய அமெரிக்காவைக் கண்டிக்காதவர்கள் சிரியாவில் ரஷ்யா பொம்மை ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்கா ஆயுதப் படைக்கும் ஏற்பட்ட பகையில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஒரே நாளில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு (தண்ணீரூற்று) உட்பட இலங்கையின் வட மாகாணமாக இருந்த முஸ்லிம்கள் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் கையில் வெறும் ஐநூறு ரூபாய் பணத்துடன் துரத்தி அடிக்கப் பட்ட போது பேசாதவர்கள்

பாலஸ்தீனத்தில் அகதியாக வந்து தங்க இடம் கொடுத்த பூர்வ குடிகளான முஸ்லிம்களைக் கடந்த பல ஆண்டுகளாக கொன்றொழித்துக் கொண்டு இருக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளை கண்டித்துப் பேசாதவர்கள்

சீனாவில் கடவுள் மறுப்பு கம்யூனிச அரசால் அப்பாவி முஸ்லிம்களாக  இருக்கும் சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெண்கள் வரை துடிதுடிக்கக் கொடுமைப் படுத்தப் பட்டு ஆண்கள் வதை முகாம்களில் கொடுமைப் படுத்தப்பட்டு

இஸ்லாத்தைக் கைவிட்டு விட வற்புறுத்திய போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தவர்கள்

உலகத்தின் குப்பைக் கிடங்காகச் சோமாலியாவை மாற்றி அங்குள்ள முஸ்லிம் மக்களை அடிமைப் படுத்திய அயோக்கிய அமெரிக்காவை கண்டிக்காதவர்கள்

இன்னும் ஏமன், லெபனான், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி  வல்லா திக்க நாடுகள் சுரண்டி அங்குள்ள முஸ்லிம் மக்களை பாதிப்படையச் செய்யும் போது கண்டிக்காதவர்கள்

இங்கே இந்தியாவில் கேவலம் மாட்டுக்காகப் பல அப்பாவி முஸ்லிம்கள், தலித்துகள் அடித்தே கொல்லப் படும் போது வேடிக்கை பார்த்தவர்கள்

ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களை அடித்தே கொன்ற போது கண்டு கொள்ளாமல் கடந்து சென்றவர்கள்

இன்று தாலிபான் என்ற மண்ணின் பூர்வ குடிகள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு அமெரிக்காவைத் துரத்தி அடித்துக் கைப்பற்றியதும்

திடீர் என்று மனித உரிமை ஆர்வலர் போல வேசம் போட்டுப் பேசுவதும் பக்கம் பக்கமாகக் கட்டுரை எழுதுவதும் , அய்யய்யோ இனிமே தாலிபான் அந்த நாட்டை சீரழித்து விடுவார்களே என்று ஜோசியம் சொல்லுவதும் திடீர் கவலை கொள்வதும் பார்க்க அவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது...

தாலிபான் எப்படி ஆட்சி செய்ய போறாங்க என்று அந்த நாட்டில் உள்ள மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.... அதைப் பற்றி இவர்கள் திடீர் என்று கவலை கொள்வது அங்கே உள்ள மக்களை நினைத்து இல்லை, இங்கே உள்ள முஸ்லிம் மக்களின் மேல் உள்ள வெறுப்பு

தாலிபான் ஒழுங்கா ஆட்சி செய்வானா அல்லது மக்களைப் பாதிக்கும் ஆட்சி செய்வானா என்று இப்போதே ஜோசியம் எல்லாம் சொல்ல வேண்டாம்,...

அவன் ஒழுங்கா ஆட்சி செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், இல்லை என்றால் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஒரு நல்லாட்சி அமையும்,

இதை வைத்து இங்கே அண்ணன், தம்பி, மாமன், மச்சானாக வாழும் இந்து முஸ்லிம் மக்களிடையே பாருங்க முஸ்லீம் என்றாலே இப்படித்தான் என்று கலவரம் உண்டாக்கும் வேலையை கை விட்டு விட்டு உங்கள் ஜோலியை போயி பாருங்க....

ஏனென்றால் இஸ்லாத்துக்குத் தாலிபான் அத்தாரிட்டி இல்லை, குர்ஆனும் ஹதீஸும் தான் எங்களுக்கு வழிகாட்டல்...

-WA: Habeeb Kashifi. . . . . . . .

தாலிபான்கள் கண்களை மூடிக் கொண்டு கையை உயர்த்தி ஆடைகளில் வேடங்கள் தரித்து உண்டு உறங்கி போதனை செய்து கொண்டு வெற்றி அடையவில்லை.

தங்கள் வாழ்க்கையை, இன்ப துன்பங்களை விட்டு, உழைத்து, இரவு பகல் உறங்காது, சரியான உணவு இல்லாது தம் நாட்டை ஆக்கிரமித்துள்ளவன் அறிவியலில் எந்த அளவு முன்னேறி இருந்தாலும் விடமாட்டேன் எனப் போரிட்டு வென்றவர்கள்.

இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேடை ஏறிப் பிடிக்காத நபரைக் குற்றம் சொல்லிப் பேசுவதும், இளைய சமுதாயத்தவரை கல்வி அறிவு உடல் பலத்தை அதிகரிக்காது மடமையாக்குவதும், பதவி கிடைக்காவிட்டால் வாழ்ந்த வீட்டைத் தீயிட்டும் கொளுத்துபவர்களுக்கும், அமெரிக்கத் தீவிரவாதத்திற்கும் வேறுபாடு இல்லை.

ஒன்று பட்டுச் சரியான திட்டம் தீட்டி ஒற்றை தலைமை ஏற்றுப் போரிட முடியாத கூட்டம் வாழத் தகுதியற்றது எனக் காலம் சொல்லும்.

நேற்று பிறந்த காளான்களை விட்டு விட்டு ஆல மரங்களைப் பிடித்து வாழ முன்வரத் தாயாரா?

ஆட்டு மந்தைகளாய் நுனி புல் மேயாமல் சிங்கமாய் வாழ மனம் உள்ளதா?

அதற்கான உங்கள் முயற்சி என்ன?

Via WhatsApp.

No comments: